பாரதி, அருளிடம் சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க, வெளியே பலமாக மழை பெய்து கொண்டிருக்க, அவசரமாக உள்ளே புகுந்த நாலு ஆட்கள், படக்கென ஷட்டரை இழுத்து, கடையை மூடினார்கள்..! அருள் விசுக்கென நிமிர்ந்தான்..! “யாருடா நீங்க..?” “டேய்..! அவளைப் போட்டு தள்ளிட்டு, வந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்புங்கடா..!” ஒருவன் சொன்னது தான் தாமதம், அடுத்தவன் ஒரு நீண்ட ஆயுதத்துடன் பாரதியை நோக்கிப் பாய, அடுத்த நொடியே அவன் கை ஆயுதம் தெறித்து அவனும் அலறியபடி தூரப்போய் விழுந்தான். கையில் […]Read More
Tags :தேவிபாலா
எதிரே வந்து நின்ற அருளைப் பார்த்ததும் கொலை வெறி கூத்தாட, பாய்ந்து அவன் கழுத்தைப் பிடித்தார் பூதம்! “உன் கதையை இன்னிக்கே முடிச்சிர்றேன்..!” சொல்லிக்கொண்டே, அவன் கழுத்தைப் பலம் கொண்ட மட்டும் இறுக்க, அருள் சிரித்துக்கொண்டே அவரது கால் விரலைத் தன் பெரு விரலால் அழுத்த, அப்படியே கண்களை இருட்டி, பிடித்திருந்த கை நழுவி, ஒரு பக்கமே மரத்த மாதிரி ஆகி, அப்படியே சரிந்தார் பூதம்..! அவரை விழாமல் தாங்கிப் பிடித்தான் அருள்..! சோபாவில் உட்கார வைத்தான்..! […]Read More
“யார் கிட்டே சவால் விடறேம்மா?” அவர் கண்களில் கேள்வி தொங்க, அவளை விஷமமாக பார்த்தார்! “அந்த வீனஸ், நம்ம க்ளையன்ட் தான்! நம்மை மீறி அவனால எதுவும் செய்ய முடியாது! ஆனாலும் இன்னிக்கு அங்கே தொழிலாளர்களுக்கு சம்பளம் தரலைனா அது நியாயம் இல்லை! மேலும் உன் அஜாக்ரதையால ஆறு லட்சம் போயிருக்கு! அதனால நான் பணம் ரெடியா வச்சிருக்கேன்! நீ கொண்டு போய் குடுத்துடு! அதுக்கு முன்னால இங்கே ஜாயினிங் ரிப்போர்ட் குடுத்து வேலைக்கு சேர்ந்துடு! தவிர […]Read More
பாரதி வெளியே வர, சிதம்பரம் மட்டும் சற்றே கவலையுடன் காத்திருந்தார்! “என்னம்மா சொன்னார் உங்கிட்ட..? கோவப்பட்டாரா..?” “கோவப்பட என்ன இருக்குப்பா..? வேண்டாம்னு சொல்றது என் உரிமை..! அதை கேள்வி கேக்கற அதிகாரம் அவருக்கு இல்லையேப்பா..! நான் கிளம்பறேன்..! சாயங்காலம் வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்..!” சிதம்பரத்தை, பூதம் அழைத்தார். சிதம்பரம் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தார். “ஒக்காருங்க சிதம்பரம்..! உங்க மகள் ரெண்டாவது முறையா என்னை அவமானப்படுத்தறா..!” சிதம்பரம் பேசவில்லை. “உங்களை பற்றி ரொம்ப உயர்வான அபிப்ராயம் வச்சிருக்கா உங்க […]Read More
அப்பா சிதம்பரம், கொஞ்சம் சோர்வுடன் இருந்தார்! அம்மா கௌசல்யா அதைக் கவனித்தாள்! பொதுவாக கண்டிப்பும் கறாரும் இருந்தாலும், குடும்பம் என்று வந்தால் உருகும் மனிதர் சிதம்பரம்..! இன்னும் சொல்லப்போனால் கொஞ்சம் சுயநலவாதியும் கூட. தன் மனைவி, மூன்று மகள்களை தவிர அவருக்கு எந்தச் சிந்தனையும் இல்லை! அவர்கள் நன்றாக இருந்தால் போதும்! தன் உடன்பிறப்புகள், மனைவியின் உறவுகள் என யாரையும் மதிக்க மாட்டார்..! யார் வீட்டு விசேஷங்களுக்கும் போகவும் மாட்டார்..! “இது சரியில்லீங்க..! நமக்கும் நாலு மனுஷங்க […]Read More
சிதம்பரம் லேசான பதட்டத்துடன், உள்ளே நுழைந்தார்! ஒன்பது மணியே ஆகியிருந்ததால் ஆஃபீசில் யாரும் வந்திருக்கவில்லை! தன் அறைக்கு வந்த சிதம்பரம், கம்ப்யூட்டரை இயக்கி, மேஜையைச் சுத்தம் செய்து, தன் வேலைகளை தொடங்கி விட்டார்! சிதம்பரம் அலுவலக ஆட்களை பெரும்பாலும் வீட்டுக்கு அழைப்பதில்லை! இங்கே முப்பது வருஷங்களாக வேலை பார்க்கிறார்! ஆரம்பம் முதலே குடும்பம் வேறு, ஆஃபீஸ் வேறு என தனித்தனியாகப் பிரித்து விட்டார்! ஆஃபீசில் நடக்கும் விழாக்களுக்கு கூட குடும்பத்தை அழைத்துப் போவதில்லை! நாலு குடும்பங்கள் ஒன்று […]Read More
கொதி நிலையில் இருந்தார் பூதம்! வீட்டுக்குள் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்! அஞ்சு, அப்பா வந்த முதலே கவனித்து விட்டாள்! அவர் முகம் அக்கினிப் பிழம்பாக இருப்பதை பார்த்தாள். “ என்னப்பா, ஏதாவது பிரச்னையா?” “இது ஆஃபீஸ் விவகாரம்மா! நீ உன் வேலையை பாரு!” பண்ணை வீட்டுக்கு அவர் போன நேரம், அருள், ஒரு பெண்ணுடன் வேகமாக பைக்கில் செல்வதைப் பார்த்து விட்டார். ஏற்கனவே ஆட்கள் தகவல் தந்து விட்டதால், அவனை அடிச்சு தூக்குங்க என உத்தரவு […]Read More
1வது அத்தியாயத்தைத் தவற விட்டவர்களுக்காக…. சிதம்பரம் – கௌசல்யா தம்பதியின் மகள்கள் பாரதி, வாசுகி, மேகலா. பாரதி, பெயருக்கேற்றபடி அழகான, அறிவான, துணிவான பெண். மேகலாவுக்கு அன்று பிறந்ததினம். தன் தோழிகளை அழைத்து பார்ட்டி வைக்க அனுமதி வாங்கி சந்தோஷமாக காலேஜ் போகிறாள். அவளுக்காக அர்ச்சனை செய்ய கோவிலுக்கு வரும் பாரதி, தொழிலதிபர் மாத்ருபூதம் செய்யும் தவறைக் கண்டிக்கிறாள். பொதுவில் நடந்ததால் பணிவாக மன்னிப்பு கேட்கும் மிஸ்டர் பூதம், அவளது குடும்ப விவரங்களைச் சேகரிக்க தன் உதவியாளனிடம் […]Read More
பாரதி, வாசுகி, மேகலா என்ற மூன்று சகோதரிகளின் கதை இது! நம் கதாநாயகி பாரதி, தப்பு நடந்தால் உடனே தட்டிக்கேட்பாள்! யாருக்கும் பயப்பட மாட்டாள். என்ன எதிர்ப்பு வந்தாலும் போராடி அதற்கொரு தீர்வு காணாமல் விட மாட்டாள். இதனால் நண்பர்களை விட பாரதிக்கு, எதிரிகள் அதிகம்! அப்பா சிதம்பரத்துக்கு பாரதியின் இந்த குணம் ரொம்ப பிடிக்கும்! அம்மா கௌசல்யா, இதற்காக பாரதியை பல முறை கண்டித்திருக்கிறாள். “ ஆயிரம் தான் ஆனாலும் நீ ஒரு பொண்ணு! அதை […]Read More