மீனவர்களின் படகில் இருந்து பாயுடன் பறந்த வித்யாதரன் இப்போது மிகவும் வேகமாகப் பறந்து கொண்டிருந்தான். மன்னிக்கவும், அந்தப் பாய் வேகமாகப் பறந்து கொண்டிருக்க, அதன் மீது கவனமாக அமர்ந்து கொண்டிருந்தான். அந்த முன்னூறு காத தொலைவுகளை மிகவும் வேகமாக சில மணிகளில் கடந்து அவனை சுமந்துவந்துவிட்டது அந்த மந்திரப்பாய். வில்லவபுரம் நகரின் மீது மந்திரப்பாய் தாழ்வாகப் பறந்து வரவும் அந்நகர மக்கள் “பாய் பறக்குது! பாய் பறக்குது!” என்று கூச்சலிட்டார்கள்! ”பாய் பறக்குது! அது மேலே ஒரு […]Read More
Tags :கோமேதகக் கோட்டை
பருந்துவடிவில் இருந்த வித்யாதரன் பறக்கும் பாயின் மீதமர்ந்து பறந்து செல்கையில் தன்னை ஒரு பருந்து துரத்தி வருவதைக் கண்டான். ஒரு நிமிடம் கண்முடி தியானித்தான். அப்போது அவன் கண்களுக்கு துரத்தி வருவது பருந்து இல்லை! ஒரு சூனியக்காரி என்பது தெரிந்துவிட்டது. அவளது நோக்கமும் அவனுக்குப் புரிந்துவிட்டது. தன்னிடம் இருக்கும் இந்த மந்திரப் பாயை பறிக்கத்தான் அவள் துரத்தி வருகின்றாள் என்பதை உணர்ந்த அவன் அந்த சூன்யக்காரிக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் பருந்து […]Read More
கரிச்சான் குருவிகளை ஏமாற்றி மலைப்பாம்பு வசிக்கும் குகையை அடைய வழி இருக்கிறதா சொல்லுங்கள்? என்று மாயக்குள்ளன் கேட்டதும் அதற்கு ஓர் வழி இருக்கிறது என்று சொன்ன வித்யாதரனைக் கூர்ந்து நோக்கினான் குள்ளன். ”மாயக் குள்ளரே! நான் விளையாட்டுக்குச்சொல்லவில்லை! கரிச்சான்களை ஏமாற்றி நாம் மலைப்பாம்பின் குகைக்குக் கண்டிப்பாகச் செல்லத்தான் போகிறோம். ஆனால் அது பகல் பொழுதில் அல்ல! இராப்பொழுதில்!” வித்யாதரன் சொல்லி முடிக்கவும் குள்ளன் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. ”அருமையான யோசனை! பொழுது சாய்ந்து இரண்டாம் ஜாமத்தில் நாம் […]Read More
தன் காலடியில் விழுந்து மூர்ச்சை அடைந்து கிடந்த குள்ளனைப் பருந்து ஒன்று தூக்கிச் செல்வதைப் பார்த்து ஒரு நொடி உறைந்த வித்யாதரன் அடுத்த நொடியில் சுதாரித்து தன் வில்லை எடுத்து அம்பைப் பூட்டி குறிபார்த்து பருந்தை நோக்கி எய்தான். வில்லில் இருந்து புறப்பட்ட அந்த அம்பு மின்னல் வேகத்தில் சென்று அந்த பருந்தைத் தாக்கி உடலை குத்தியது. உயிரிழந்த பருந்து தன் பிடியைவிட குள்ளன் பூமியை நோக்கி வாயு வேகத்தில் வரவும் வித்யாதரன் ஓடிச் சென்று அவனை […]Read More
“என்ன வித்யாதரா! இப்படி என்னை அதிசயமாக பார்க்கிறாய்! நான் தான் சித்திரக் குள்ளன்.உன் நட்பை நாடி வந்துள்ளேன்!” என்றான் அந்தக் குள்ளன். ”சித்திரக் குள்ளரே! நான் இதுவரை என் பாட்டி சொன்ன கதைகளில்தான் உம்மைப் போன்ற குள்ளர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் நிஜத்தில் பார்க்கிறேன்! அதுதான் கொஞ்சம் பிரமித்துப் போய்விட்டேன்.” என்றான் வித்யாதரன். ”வித்யாதரா! விந்திய மலைக்காடுகளில் நாங்கள் வாழ்கிறோம். அங்கே இருக்கும் ஓர் குகையில் எங்கள் கூட்டம் இருக்கிறது.” ”அப்படியா! மகிழ்ச்சி! தாங்கள் என்னைத் தேடிவந்த காரணம் […]Read More
“வித்யாதரா, சமயோசித புத்தி நம்மைப் பெரும் சங்கடத்தில் இருந்து விடுவித்துவிடும். அந்த திறமை உனக்கு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும் ஒரு கதை சொல்கிறேன் கேள். முன்னொரு காலத்தில் காட்டில் ஓர் ஆட்டுக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அதில் ஓர் வயதான ஆடு வழி தவறி நெடுந்தொலைவு வந்து விட்டது. பொழுதும் சாய்ந்துவிட்டது. திடீரெனப் பெரும் மழையும் பிடித்துக் கொள்ளவே அந்த ஆடு ஒதுங்க இடம் தேடியது. நல்லவேளையாக அங்கே ஒரு குகை தென்பட்டது ஆடு அங்கே […]Read More
மன்னருக்கு வித்யாதரனை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு! ஆனாலும் அவனது அறிவுக் கூர்மையைச் சோதிக்கணும்னு நினைச்சாரு. அதனாலதான் அவனுக்கு மூன்று போட்டியை வைச்சாரு. வித்யாதரனும் போட்டிக்குத் தயாராவே இருந்தான். கொஞ்சம் கூட்த் தயங்காம, “என்ன போட்டி சொல்லுங்க மஹராஜா! இந்த போட்டியில் ஜெயிச்சு காட்டி என் திறமையை நிரூபிக்கிறேன்”னு சவால் கொடுத்தான். வித்யாதரனின் ஆர்வமும் அறிவும் மன்னரின் மனசுக்குள் ஒர் நம்பிக்கையை ஏற்படுத்திருச்சு! “நம்ம பொண்ணை ராட்சசன் கிட்டே இருந்து மீட்டு வர இவந்தான் சரியான ஆளு!”ன்னு மனசுக்குள்ளே […]Read More
”என் பொண்ணை ராட்சசன் தூக்கிட்டு போயிட்டானாமே! நீங்க அவளை பார்த்துக்கிட்ட லட்சணம் இதுதானா? உங்களை கைது பண்ணி சிறையிலே அடைக்க போறேன். என் பொண்ணு உயிரோட திரும்பி வந்தா உங்களுக்கு விடுதலை! இல்லேன்னா உங்க உயிரும் பறிக்கப்படும்”னு கத்திக்கிட்டு தன் முன்னால் வந்து நின்ற ராஜாவைப் பார்த்து குரு வெலவெலத்துப் போயிட்டாரு. அவருக்குத்தொண்டைத்தண்ணி எல்லாம் வத்திப் போச்சு! பேசக் குரலே வரலை “அது வ… வந்து மஹாராஜா! இது எதிர்பாராம நடந்துவிட்டது. காட்டில் சுள்ளிப் பொறுக்க மாணவர்கள் […]Read More
கடல் நடுவுலே இருந்த தீவுலே கோமேதகக் கோட்டை இருந்தது. கோட்டையைச் சுத்தி கடல். கடலுக்குள்ளே பெரிய பெரிய சுறா மீன்கள் ஆளையே முழுங்கிற அளவுக்கு இருந்துச்சு. சுறா மீன்கள் மட்டுமல்ல ராட்சத திமிங்கலங்களும் அந்த கடலில் இருந்தது. கடலில் செல்லும் கப்பல்கள் அந்த கோட்டை இருக்கும் திசை பக்கம் கூட எட்டிப் பார்ப்பது இல்லை! ஏனெனில் அந்த தீவில் இந்த ராட்சதனைப் போல பல அரக்கர்களும் அரக்கிகளும் வசிச்சு வந்தாங்க! அவர்களுக்கு ஒரே பொழுது போக்கு அந்த […]Read More
நெடுங்காலத்துக்கு முன்னாடி வில்லவபுரம் என்ற நாட்டை விஜயேந்திரன் என்ற ராஜா ஆண்டுவந்தாரு. அவருக்கு மகன்கள் இல்லை. ஓர் அழகிய மகள் மட்டும் உண்டு. அந்த மகளை மகன்களுக்கு ஈடா வளர்க்க முடிவு செஞ்சாரு ராஜா. அதனாலே ஒரு சிறந்த ஆசிரியரை நியமிச்சு இளவரசிக்குக் கல்வியையும் போர்க்கலைகளையும் போதிக்க ஏற்பாடு செய்ய நினைச்சாரு. அந்த நாட்டின் எல்லையோரம் இருந்த காட்டுக்குள்ளே துரோணா என்ற ஓர் ஆசிரியர் ஒரு குருகுலம் அமைச்சு பாடங்களைக் கத்து தந்துக்கிட்டு இருந்தாரு. அவரைக் கூப்பிட்டு […]Read More