பிரபல நடிகை கமலா காமேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்..!
கமலா காமேஷ் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் காலமானார். தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழியில் அம்மா மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் சுமார் 480-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் கமலா காமேஷ்(72). குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் கடந்த 1974-ம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உமாரியாஸ் என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கமலா உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் காலமானார்.
இதனையடுத்து, அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவர் கடைசியாக ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் வெளிவந்த வீட்டுல விசேஷம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.