வரலாற்றில் இன்று (11.01.2025)

 வரலாற்றில் இன்று (11.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 11 (January 11) கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

630 – மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர்.
1055 – தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார்.
1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.
1571 – ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.
1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான பிரித்தானிய அரச கடற்படையும் சர் எக்டர் மன்ரோ தலைமையிலான தரைப்படையும் இணைந்து திருகோணமலைக் கோட்டையைக் கைப்பற்றின.[2][3] ஆகத்து 29 இல் இக்கோட்டையை அவர்கள் பிரான்சிடம் இழந்தனர்.
1787 – யுரேனசின் டைட்டானியா, ஒபரோன் ஆகிய இரண்டு சந்திரன்களை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.
1805 – அமெரிக்காவில் மிச்சிகன் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
1851 – சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சஸ் அருகே அலபாமா என்ற கப்பல் ஆட்டரசு என்ற கப்பலை மோதி மூழ்கடித்தது.
1879 – ஆங்கில-சூலூ போர் ஆரம்பமானது.
1911 – காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.
1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.
1923 – முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட இழப்பீடுகளைப் பெறும் பொருட்டு பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் படையினர் செருமனியின் ரூர் பகுதியைக் கைப்பற்றினர்.
1935 – அவாயில் இருந்து கலிபோர்னியா வரை தனியாகப் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை அமேலியா ஏர்ஃகாட் பெற்றார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர் டச்சு கிழக்கிந்தியாவின் போர்ணியோவில் தரக்கான் தீவைக் கைப்பற்றினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.
1946 – கம்யூனிசத் தலைவர் என்வர் ஓக்சா அல்பேனியாவின் அரசுத் தலைவராகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.
1957 – ஆப்பிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.
1962 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி பி-37 தீப்பிடித்து அழிந்தது.
1962 – பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.
1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.
1972 – கிழக்குப் பாக்கித்தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1994 – அயர்லாந்து அரசு ஐரியக் குடியரசு இராணுவம், மற்றும் அதன் அரசியல் அமைப்பான சின் பெயின் ஆகியவற்றின் ஒலிபரப்புகள் மீதான 15-ஆண்டுகள் தடையை நீக்கியது.
1998 – அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 – செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.
2013 – சோமாலியாவில் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் ஒருவரை விடுவிக்க எடுத்த முயற்சியில் ஒரு பிரெஞ்சுப் படைவீரரும், 17 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.

பிறப்புகள்

347 – முதலாம் தியோடோசியஸ், உரோமைப் பேரரசர் (இ. 395)
1209 – மோங்கே கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1259)
1755 – அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்கப் பொருளியலாளர், அரசியல்வாதி (இ. 1804)
1786 – ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1869)
1842 – வில்லியம் ஜேம்ஸ், அமெரிக்க உளவியலாளர், மெய்யியலாளர் (இ. 1910)
1859 – கர்சன் பிரபு, பிரித்தானிய இந்தியாவின் 35வது தலைமை ஆளுநர் (இ. 1925)
1906 – ஆல்பர்ட் ஹாப்மன், சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (இ. 2008)
1911 – சானா, இலங்கை நாடகாசிரியர், வானொலி நாடகக் கலைஞர் (இ. 1979)
1944 – சிபு சோரன், இந்திய அரசியல்வாதி
1953 – ஜெயராஜ் பெர்னான்டோபுள்ளே, இலங்கை அரசியல்வாதி (இ. 2008)
1954 – கைலாசு சத்தியார்த்தி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய செயற்பாட்டாளர்
1973 – ராகுல் திராவிட், இந்தியத் துடுப்பாளர்
1981 – கிரண் ராத்தோட், இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

140 – ஹைஜீனஸ் (திருத்தந்தை) (பி. 74)
1753 – ஹேன்ஸ் ஸ்லோன், அரிய-ஆங்கிலேய மருத்துவர் (பி. 1660)
1928 – தாமஸ் ஹார்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1840)
1932 – திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (பி. 1904)
1966 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் 2வது பிரதமர் (பி. 1904)
1975 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (பி. 1931)
1976 – ஏரம்பு சுப்பையா, இலங்கையின் நடன ஆசிரியர்
2007 – எருவில் மூர்த்தி, ஈழத்துக் கவிஞர்
2008 – எட்மண்ட் இல்லரி, நியூசிலாந்து மலையேறி (பி. 1919)
2013 – ஏரன் சுவோற்சு, அமெரிக்கக் கணினியாளர் (பி. 1986)
2014 – ஏரியல் சரோன், இசுரேலின் 11வது பிரதமர் (பி. 1928)

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் (தூனிசியா)
குடியரசு நாள் (அல்பேனியா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...