கூடாரவல்லி 2025 : மனம் போல மாங்கல்யம் அமைந்திட ஆண்டாளை வழிப்படுங்கள்.!!

 கூடாரவல்லி 2025 : மனம் போல மாங்கல்யம் அமைந்திட ஆண்டாளை வழிப்படுங்கள்.!!

கூடாரவல்லி 2025 : மனம் போல மாங்கல்யம் அமைந்திட ஆண்டாளை இவ்வாறு வழிப்படுங்கள்.!!

மனம் போல மாங்கல்யம்,

கூடாரவல்லி என்பது ஆண்டாள் திரு ரங்கநாதனை வழிப்பட்டு அவருடன் ஒன்றுக் கூடிய நாளாக வைணவ கோயில்களில் கொண்டாடப்படுகிறது. இது ஆண்டு தோறும் வரும் மார்கழி மாதத்தில் வரும் 27-ம் நாளில் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 11, . சனிக்கிழமை அன்று அனைத்து வைணவத் திருத்தளங்களிலும் கூடாரவல்லி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறும்.

ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் “கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா” எனும் பாடலை பாடி, “மூடநெய் பெய்து முழங்கை வழி வார” என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரஅடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.

கூடாரவல்லி அக்கார அடிசில் சிறப்பு

மார்கழி மாத 30 நாட்களிலும் பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள்.

ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் 27ஆம் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

மனம் போல மாங்கல்யம்

திருமணமாகாத கன்னியர்கள் மற்றும் திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண்கள் என அனைவரும் இந்த நன்னாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று ஆண்டாளை தரிசனத்துடன் நெய்வேத்தியம் வைத்து வழிப்படட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்கிட மனதிற்கு பிடித்தமான திருமண வாழ்க்கை அமையும்.

அதுபோல கணவர் மீது தீரா காதல் கொண்டிருக்கும் மனைவிமார்கள் தீர்க்க சுமங்கலியாக இருந்திட இந்த சிறப்பான நாளில் ஆண்டாளை வழிப்பட்டு வருகின்றனர்.

இந்த கூடாரவல்லி வழிபாட்டால் கணவன் மனைவி ஒற்றுமையுடன் இணைபிரியா தம்பதிகளாக வாழ்வாங்கு வாழ்வர்.

ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள் “கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா” எனும் பாடலை பாடி, “மூடநெய் பெய்து முழங்கை வழி வார” என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரஅடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்வது நலமளிக்கும்.

கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களில் குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் ” முழங்கை வழியே நெய் ஒழுகுமாறு’ சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள்.

இந்த சிறப்பான நாளில் பெருமாளைத் தரிசித்து பிரசாதம் பெற்றால் கன்னியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் நல்ல கணவன் கிட்டுவார் என்பது ஐதீகம்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...