‘ஜஸ்டின் ட்ரூடோ’ ராஜினாமா..!

 ‘ஜஸ்டின் ட்ரூடோ’ ராஜினாமா..!

கனடா நாட்டின் பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கனடாவில் வரும் அக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் நெருக்கடி காரணமாக அவர் பிரதமர் பதிவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு முதல் 9 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வரும் நிலையில் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் லிபரல் கட்சி தலைவர் பதவி மற்றும் பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை, இடைக்கால பிரதமராக நீடிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடாவில் பொருளாதார வளர்ச்சி மந்தம், விலைவாசி உயர்வு, வெளிநாடுகளுடனான வர்த்தக கொள்கைகளில் குழப்பம் போன்ற பிரச்னை நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி, ட்ரூடோவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தது. அப்போது முக்கிய கூட்டணி கட்சி ட்ரூடோவை ஆதரிக்க மறுத்துவிட்டது.

இதையடுத்து சிறு கட்சிகளின் ஆதரவை பெற்று, தன் பதவியை ட்ரூடோ தக்க வைத்தார். இந்த நிலையில் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளதால் மக்கள் ஆதரவு எந்த கட்சிக்கு அதிகம் என்ற கருத்துக் கணிப்பு சமீபத்தில் வெளியானது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, ‘‘கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அடுத்த தேர்தலில் நான் போட்டியிடவும் மாட்டேன். கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரதமர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்’’ என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தை வரும் 24ம் தேதி வரை ஒத்திவைக்கவும் அவர் குடியரசு ஜெனரலிடம் வலியுறுத்தி உள்ளார். மேலும் அடுத்த தலைவர் குறித்து லிபரல் கட்சியின் தேசிய செயற்குழு கூடி முடிவு எடுக்கும். ஒருவேளை கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டால், முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் கனடா அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...