வரலாற்றில் இன்று (07.01.2025)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சனவரி 7 (January 7) கிரிகோரியன் ஆண்டின் ஏழாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 358 (நெட்டாண்டுகளில் 359) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1325 – போர்த்துக்கல் மன்னனாக நான்காம் அபொன்சோ முடிசூடினார்.
1558 – கலே நகரத்தை இங்கிலாந்திடம் இருந்து பிரான்சு கைப்பற்றியது.
1566 – ஐந்தாம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1608 – அமெரிக்காவில் ஜேம்ஸ்டவுண் நகரம் தீயினால் அழிந்தது.
1610 – கலிலியோ கலிலி யுப்பிட்டர் கோளின் கனிமீடு, கலிஸ்டோ, ஐஓ, யூரோப்பா ஆகிய நான்கு நிலவுகளைக் கண்டறிந்தார்.
1738 – போபால் போரில் மராட்டியர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, பாஜிராவ், இரண்டாம் ஜெய் சிங் ஆகியோருக்கிடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1782 – அமெரிக்காவின் முதலாவது வர்த்தக வங்கி வட அமெரிக்க வங்கி திறக்கப்பட்டது.
1785 – பிளான்சார்ட் என்ற பிரான்சியர் வளிம ஊதுபை ஒன்றில் இங்கிலாந்து டோவர் துறையில் இருந்து பிரான்சின் கலே வரை பயணம் செய்தார்.
1841 – யாழ்ப்பாணத்தில் உதயதாரகை பத்திரிகை தமிழ், ஆங்கில மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
1846 – இலங்கையில் தி எக்சாமினர் என்ர ஆங்கில செய்திப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது.[2]
1894 – வில்லியம் கென்னடி டிக்சன் அசையும் திரைப்படத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1927 – அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து முதலாவது தொலைபேசிச் செய்தி நியூயோர்க் நகருக்கும் லண்டனுக்கும் இடையில் அனுப்பப்பட்டது.
1935 – பெனிட்டோ முசோலினி மற்றும் பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர் பியேர் லாவல் ஆகியோர் பிரெஞ்சு-இத்தாலிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
1939 – மார்கெரிட் பெரே என்பவர் பிரான்சியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார். இயற்கையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடைசித் தனிமம் இதுவாகும்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் பட்டான் மீதான முற்றுகையை யப்பான் ஆரம்பித்தது.
1950 – அமெரிக்காவில் அயோவா மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
1954 – இயந்திர மொழிபெயர்ப்பு முதன்முறையாக நியூயோர்க் ஐபிஎம் தலைமையகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
1959 – பிடல் காஸ்ட்ரோவின் புதிய கியூபா அரசை அமெரிக்கா அங்கீகரித்தது.
1968 – நாசாவின் சேர்வயர் 7 விண்கலம் ஏவப்பட்டது.
1972 – எசுப்பானிய விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் உயிரிழந்தனர்.
1979 – வியட்நாமியப் படைகளிடம் கம்போடியாவின் தலைநகர் நோம் பென் வீழ்ந்தது. போல் போட்டும் அவனது கெமர் ரூச் படைகளும் பின்வாங்கினர்.
1984 – புரூணை ஆசியான் அமைப்பில் 6வது உறுப்பு நாடாக இணைந்தது.
1985 – சப்பானின் முதலாவது தானியங்கி விண்கலம், மற்றும் முதலாவது விண்ணுளவி ஆகியன விண்ணுக்கு ஏவப்பட்டன.
1990 – பீசாவின் சாய்ந்த கோபுரத்தின் உட்பகுதி பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பொதுமக்களின் பார்வைக்கு மூடப்பட்டது.
1991 – எயிட்டியின் முன்னாள் தலைவர் ரொஜர் லபோட்டாண்ட் இராணுவப் புரட்சியை நடத்தித் தோல்வி கண்டு, பின்னர் கைது செய்யப்பட்டார்.
1999 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மேலவை விசாரணை ஆரம்பமானது.
2005 – இத்தாலியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
2006 – திருகோணமலையில் இலங்கைக் கடற்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 15 படையினர் கொல்லப்பட்டனர்.
2012 – நியூசிலாந்தில் கார்ட்டர்ட்டன் நகரில் வெப்ப வளிம ஊதுபை ஒன்று வெடித்ததில், அதில் பயணம் செய்த 11 பேர் உயிரிழந்தனர்.
2015 – பாரிசு நகரில் சார்லி எப்டோ அலுவலகங்களில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர், 11 பேர் காயமடைந்டஹன்ர்.
2015 – யெமன், சனா நகரில் வாகனக் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றதில் 38 பேர் கொல்லப்பட்டானர்.

பிறப்புகள்

1502 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (இ. 1585)
1831 – ஈன்றிக் வொன் இசுட்டீபன், பன்னாட்டு அஞ்சல் ஒன்றியத்தை ஆரம்பித்த செருமானியர் (இ. 1897)
1844 – பெர்னதெத் சுபீரு, பிரான்சியப் புனிதர் (இ. 1879)
1851 – ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன், பிரித்தானிய மொழியியல் அறிஞர் (இ. 1941)
1920 – அலஸ்ட்டயர் பில்கிங்டன், ஆங்கிலேய இயந்திரத் தொழில்நுட்பவியலாளர் (இ. 1995)
1925 – தங்கம்மா அப்பாக்குட்டி, யாழ்ப்பாணத்தின் சமய, சமூக செயற்பாட்டாளர் (i. 2008)
1938 – பி. சரோஜாதேவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1943 – சடாகோ சசாகி, அணுகுண்டினால் பாதிக்கப்பட்ட சப்பானியப் பெண் பிள்ளை (இ. 1955)
1945 – சுலாமித் பயர்சுடோன், கனடிய பெண்ணியவாதி (இ. 2012)
1948 – சோபா டே, இந்திய எழுத்தாளர்
1948 – இசிரோ மிசுகி, சப்பானியப் பாடகர், நடிகர்
1953 – பாக்கியராஜ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்
1964 – நிக்கோலஸ் கேஜ், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
1967 – இர்பான் கான், இந்திய நடிகர் (இ. 2020)
1971 – ஜெரமி ரெனர், அமெரிக்க நடிகர்
1972 – எஸ். பி. பி. சரண், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்
1976 – ஹரிஷ் ராகவேந்திரா, தென்னிந்தியத் திரைப்படப் பாடகர், நடிகர்
1979 – பிபாசா பாசு, இந்திய நடிகை

இறப்புகள்

1943 – நிக்கோலா தெஸ்லா, செருபிய-அமெரிக்க இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1856)
1978 – வெ. சாமிநாத சர்மா, தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. 1895)
1987 – லட்சுமி, தமிழக எழுத்தாளர் (பி. 1921)
1989 – இறோகித்தோ, சப்பானியப் பேரரசர் (பி. 1901)
1995 – சம்பந்தன், ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1913)
1995 – முரே ரோத்பார்ட், அமெரிக்கப் பொருளியலாளர், வரலாற்றாளர் (பி. 1926)
1996 – வி. குமார், தமிழகத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1934)
2011 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1941)
2015 – பி. எஸ். அப்துர் ரகுமான், இந்தியத் தொழிலதிபர் (பி. 1927)
2015 – ஜார்ஸ் போலான்ஸ்கி, துனீசிய-பிரான்சிய கேலிச்சித்திர வரைஞர் (பி. 1934)
2016 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (பி. 1936)

சிறப்பு நாள்

நத்தார் (கிழக்கு மரபுவழி திருச்சபை யூலியன் நாட்காட்டி)
இனவழிப்பு நாளில் இருந்து விடுதலை (கம்போடியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!