HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை..!

 HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை..!

HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை  என மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சீனாவில் பரவிவரும் HMPV என்ற புதிய வைரஸ் தொற்று சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று எதுவும் இல்லை என தமிழ்நாடு மருத்துவ துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மருத்துவத்துறை விளக்கமளித்துள்ளதாவது;

“HMPV வகை தொற்று ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது தான். புதிதாக உருமாறிய தொற்று எதுவும் தற்போது பரவவில்லை. தமிழ்நாட்டில் தொற்றுநோய் தடுப்பு ஆய்வகங்கள் 36 உள்ளது. மேலும் அவற்றில் பரிசோதனை செய்ய பிசிஆர் சோதனை கருவிகளும் உள்ளது.  மாநில ஆய்வு மையத்தில் தொற்று தொடர்பான எந்த பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் இன்ஃபுளுவென்சா தொற்றுதான் அதிக அளவில் உள்ளது.  இதுவும் சாதாரண பருவ கால காய்ச்சலே. அதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்படுபவர்களை கண்காணித்ததில், இது போன்ற பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பெரிய அளவில் அனுமதிக்கப்படவில்லை.

கட்டுப்படுத்தும் அளவிலேயே பருவ கால காய்ச்சல் பாதிப்புகள் தமிழகத்தில் உள்ளது” என மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...