திருப்பாவை பாசுரம் 20 –

 திருப்பாவை பாசுரம் 20 –

திருப்பாவை பாசுரம் 20 – முப்பத்து மூவர்

“பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!”

பாசுரம்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்

முப்பத்து முன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும் முன்பே சென்று அவர்களின் நடுக்கத்தை போக்கும் வீரனே எழுந்திரு!

கருணையுள்ளவனே, வல்லமையானவனே, பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!

தங்கம் போன்ற திருமேனி, சிவந்த உதடு, சிறிய இடையை உடைய நப்பின்னையே!, திருமகளே! எழுந்திரு! விசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் எங்களுக்குக் கொடுத்து

எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...