புதிய விடியல் தொடரட்டும்…வாழ்த்துக்கள்
விடைபெற நினைப்பது
இரவுகள் மட்டுமல்ல!
கடந்த ஆண்டின்
விடியல்களும் தான்!
காலச் சக்கரத்தின்
கட்டாய சுழற்சியில்
கைகளை அசைத்தே
விடை பெறுகிறது
இதயங்கள் தாங்கி
உதயமாய் நின்ற
இந்த ஆண்டு 2024
வேதனைகள் தந்தாலும்
வெற்றிகள் கிடைத்தாலும்
மலர்ந்திருக்கும் புத்தாண்டு
வசந்தமாய் அமையும்
என்ற நம்பிக்கையில்
விடை கொடுத்தே
மனம் மகிழ்வோம்
வசந்தமாய் விடியல்கள்
தொடர்ந்து வரும்!!!
புதிய இலக்கு நோக்கிய
புதிய விடியல் தொடரட்டும்…
வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வருடமும் ஏதாவதொரு பாடத்த வாழ்க்கையில சொல்லித் தந்துட்டு போகும்.
பிடிக்குதோ, பிடிக்கலயோ அது வாழ்வோட ஒரு அங்கமாயிருக்கும்.
இந்த வருசத்தை சந்தோசமாதான் ஆரம்பிச்சேன்.
ஆனா எனக்கு ரொம்ப சவாலான ஒன்னாகத் தான் இருந்துச்சு.
எதிர்பார்த்த, எதிர்பாராத பல பிரச்சனைகள் வருசம் முழுக்க இருந்தது.
அதெல்லாம் தாண்டி இந்த வருடத்தோட இறுதியில் நின்னு திரும்பிப் பார்க்கிறப்போ எல்லாம் சில விடயங்கள்தான் கண்ணுக்கு தெரியும்.
நாம அந்த ஆண்டுக்குரிய ஞாபகங்களா அதைத்தான் எதிர்காலத்துக்கு கடத்துவோம்.
இந்த வருடம் எனக்கு கற்றுக் கொடுத்த ரொம்ப அழகானதொரு விசயம்னா அது சக மனிசங்கள பற்றிய புரிதல்தான்.
நான் என்ன சுற்றி இருக்குற அத்தன பேரையும் மதிப்பேன், நேசிப்பேன்.
ஒரு இடத்துல கூட நான் யாரையும் எதுக்காகவும் எடை போட்டதில்ல, அடுத்தவங்களோட தனிப்பட்ட விசயங்கள்ல தலையிட்டதில்லை.
அதனாலதான் என் சுத்தியிருக்குற எல்லோருக்கும் என்ன பிடிக்கும்.
ஆனா இத தாண்டி நான் சிலபேருங்க மேல எதிர்மறையான எண்ணங்கள வச்சிருந்தேன்.
இந்த வருசம் அப்டிப்பட்ட பல நல்ல மனிதர்களுடன் நட்பு கிடைச்சுது.
பழக எனக்கு வாய்ப்பு தந்தது.
ஒவ்வொரு மனிதர்களும் என்ன ஆச்சர்யப்படுத்தினாங்க.
அதுக்குப் பிறகு என் சிந்தனைகளை இன்னும் இன்னும் நேர்மைப்படுத்திருக்கேன்.
உண்மைதான், இந்த மனிதர்களை கொண்டாடுறதுக்கு அவங்கள்ல நிறைய நல்ல விசடங்கள் இருக்கு… ❤️
இந்த வருசத்தோட இன்னொரு முக்கியமான பாடம் நான் என்னையே அறிஞ்சுக்கிட்டது.
எவ்வளவு தெளிவோட நான் நகர்ந்தாலும் இந்த வருசம் என்ன ரொம்ப ரொம்ப தெளிவாக்கியிருக்கு.
எனக்கு எது தேவை, எது தேவையில்லனு என்ன மனசால உணர வச்சது, அதுக்கான அத்தனை வாய்ப்புக்களையும் உருவாக்கித் தந்தது இந்த வருடம் மட்டும்தான்.
எவ்வளவு தடவை யோசிச்சு ஒரு விசயத்துல முடிவெடுத்தாலும் மனசுல அதப்பற்றிய ஒரு குழப்பமும், பயமும் ஓரமா இருந்துட்டே இருக்கும்.
ஆனா இந்த வருசம் அப்படி இல்ல.
அத்தனை தேர்வுகளையும் கண் முன்ன வச்சு, அதற்கான நேரத்தையும் தந்துச்சு.
என் புரிதலும், தைரியமும் என்ன எந்த பக்கமா கொண்டு போச்சு என்பதில் எனக்கு ஆத்ம திருப்தியிருக்கு.
வாழ்க்கை இலாப நட்ட கணக்கு இல்ல, அது வாழ்ந்து தீர்க்க வேண்டிய ஒரு அழகியல்… ❤️
Happy last day of the year..
Thank you 2024 for your existence ❤️
31 | 12 | 2024