திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய்
திருப்பாவை பாசுரம் 16 – நாயகனாய் நின்ற ..
கோபியர்கள் நந்த கோபனின் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவை திறக்க வேண்டுதல்:
பாசுரம்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.
பாசுர விளக்கம்
“எங்களுக்கு தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே !
கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே !
அழகிய தாழ்ப்பாளைத் திறப்பாயாக! நாங்கள் உள்ளே செல்லவேண்டும்.
ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான் நேற்றே விரும்பியதைக் தருகிறேனென்று வாக்களித்துள்ளான்.
எனவே, அவனை துயிலெழுப்பி பாட தூய்மையுடன் வந்துள்ளோம்.
முதலிலேயே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள கதவை திறந்து எங்களை உள்ளேவிடு” என்று சொல்கிறாள் ஆண்டாள்!
ஆண்டாள் விண்ணோர்களை எழுப்பும் பாசுரங்கள் (16 முதல் 20 வரை), அதில் முதல் பாசுரம் (16) , விண்ணோர்களாகிய ஜயர் விஜயர்களைச் சொல்லும் பாசுரம் இது என பூர்வாசார்யர்கள் சொல்வர்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்