திருப்பாவை பாசுரம் 8 –
திருப்பாவை பாசுரம் 8 –
கீழ்வானம் வெள்ளென்று…
கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழிகீழ்வானம்
வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்.
விளக்கவுரை
கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது
எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின
கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி
உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்
குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு.
கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்
குதிரையாக வந்த அசுரன் கேசியை வாயை கிழித்தவன்,
மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால்
நம் குறைகளை ஆராய்ந்து, இரங்கி நமக்கு அருள் புரிவான்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!