சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது… அகிலேஷ் யாதவ் அதிரடி..!

 சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது… அகிலேஷ் யாதவ் அதிரடி..!
நான் சைக்கிளை மட்டும் விரும்புகிறேன். சைக்கிள் வேகமாக செல்வதற்கான நேரம் வந்து விட்டது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள, கன்னோஜ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்றார். அப்போது, நாட்டில் உயர்ந்து வரும் பணவீக்கம் குறித்து பேசினார்.

திடீரென கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் குறுக்கிட்டு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் என கேட்டார். அவரை அருகில் வருமாறு, அகிலேஷ் யாதவ் அழைத்தார். நெருங்கி வந்த அந்த இளைஞர் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டார். 
அகிலேஷ், நீங்கள் பா.ஜக கட்சியைச் சேர்ந்தவரா என ஆவேசமாக கேட்டார். அந்த இளைஞர், ராமர், கிருஷ்ணர், விஷ்ணு, சிவன் என அனைத்து கடவுள்களையும் நான் போற்றுவேன் என கூறினார். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து இதுகுறித்து போலீஸ் அதிகாரியிடம் அகிலேஷ் புகாராக கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் இரு நாட்களுக்கு முன்னர் பாஜக தலைவர் ஒருவர்  போனில் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது அந்த இளைஞர் பாதுகாப்பு வளையத்தை தாண்ட முயற்சித்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், லக்னோவில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று பேட்டியளித்தார். அப்போது, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில்;-  எனக்கு பாதுகாப்பு அவசியமில்லை. நான் சுதந்திரமாக வாழ விரும்புகிறேன். ஆனால், உள்ளூர் போலீஸ் ஆய்வாளர் எனது செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வதற்கு ஆசைப்படுகிறேன். எப்படி எனது கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அவர் வர முடியும்? எனக்கு வழங்கப்பட்டு வந்த தேசிய சிறப்பு படை (என்எஸ்ஜி) பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது ஏன்? எனது வீடு மற்றும் வாகனத்தை பாஜக திரும்ப எடுத்துக் கொண்டது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...