தமிழகத்தில், 206 கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சென்னையில், 2 பேருக்கு கொரானா அறிகுறி! சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரானா அறிகுறி. கொரானா அறிகுறிகளுடன் வந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பு.
ஆதரவற்றோர் இல்லங்களில் வளரும் பெண்கள், 21 வயதை பூர்த்தி செய்யும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் பெண் சிசு கொலைகளை தடுத்து, குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்தும் முதல், 3 மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி.
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் முதலமைச்சர் – நிலோஃபர் கபில் பேச்சு இஸ்லாமியர்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து நிலோஃபர் கபில் பேச்சு.
உலமாக்களுக்கு ஓய்வூதியம் ரூ.1500லிருந்து, ரூ.3000மாக உயர்வு.உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் நிதி,ஹஜ் பயணிகளுக்கு, சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு.
சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவந்த சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நிறைவு
தமிழக அரசுக்கு விருது வழங்கும்போது சரியாக இருந்த மத்திய அரசின் புள்ளிவிவரம், இடைநிற்றல் விவரத்தில் மட்டும் தவறாக இருக்கிறதா? இடைநிற்றல் விவகாரம்: மத்திய அரசின் புள்ளிவிவரம் தவறு என அமைச்சர் கூறியதற்கு எதிராக தங்கம் தென்னரசு பேரவையில் கேள்வி.
பேரவையில் இன்று:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவிப்பு – முதல்வர் பழனிசாமி.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு விரைவில் நிரந்தர இயக்குனர் நியமனம் – அமைச்சர் பாண்டியராஜன். காஞ்சிபுரத்தில், ரூ.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தமிழாய்வு நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் – அமைச்சர் பாண்டியராஜன்.
தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் 166வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் மரியாதை செலுத்தினர்.
கீழடியில், 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி. கீழடியில் தொடங்கவுள்ள ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடக்கம். முறைகேட்டில் ஈடுபட்ட, 39 பேருக்கு பதிலாக புதியவர்கள் சேர்க்கப்பட்டு கலந்தாய்வு துவக்கம்.
டெல்லி: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்றார்.
இந்தியாவுடன் மிகப் பெரிய வணிக ஒப்பந்தம் செய்யப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நிறைவடையவுள்ள நிலையில், முக்கியமான மசோதாக்கள் நாளை தாக்கல் செய்யப்படவுள்ளன.
சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம்.சென்னையில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம். தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி.