தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்..!

 தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்..!

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். லீக்கில் ‘டாப்-2’ இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதனையடுத்து தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று (நவ.1) நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் – தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. தபாங் டெல்லி அணி இதுவரை ஆடிய 14 ஆட்டங்களில் 6 இல் வெற்றி பெற்ற நிலையில் பாயிண்ட்ஸ் டேபிளில் 8 வது இடத்தில் உள்ளது.

அதேபோல், தமிழ் தலைவாஸ் அணி 14 போட்டிகளில் 5 இல் வெற்றி பெற்று 9வது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் – பாட்னா பைரைட்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று நடைபெறம் போட்டியில் வெற்றி பெற்று பாயிண்ட்ஸ் டேபிளில் முன்னேறும் முனைப்பில் ஒவ்வொரு அணியும் ஆடும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...