வரலாற்றில் இன்று (19.11.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

நவம்பர் 19 (November 19 ) கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 322 ம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1493 – கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.
1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1881 – உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS சிட்னி, மற்றும் HSK கோர்மொரன் என்ற போர்க்கப்பல்களுக்கிடையில் நிழந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 அவுஸ்திரேலியக் கடற்படையினரும் 77 நாசி ஜெர்மனியக் கடற்படையினரும் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை – சோவியத் படையினர் ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள் தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
1946 – ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ் கொன்ராட், அலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.
1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது கோலைப் பெற்றார்.
1977 – எகிப்திய அதிபர் அன்வர் சதாத் அமைதிப் பேச்சுக்களுக்காக இஸ்ரேல் சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற முதல் அரபுத் தலைவர் இவரே.
1977 – போர்த்துக்கல் போயிங் விமானம் ஒன்று மெடெய்ரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – பனிப்போர்: அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.

பிறப்புகள்

1600 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (இ. 1649)
1711 – மிகைல் இலமனோசொவ், உருசிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1765)
1775 – யொஃகான் இல்லிகெர், செருமானிய விலங்கியலாளர் (இ. 1813)
1828 – இராணி இலட்சுமிபாய், ஜான்சி பேரரசி (இ. 1858)
1831 – சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது அரசுத்தலைவர் (இ. 1881)
1845 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1939)
1907 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976)
1909 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்கக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2005)
1914 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, இந்திய சுதந்திர போராட்ட செயற்பாட்டாளர், சீர்திருத்தவாதி (இ. 1982)
1917 – இந்திரா காந்தி, 3வது இந்தியப் பிரதமர் (இ. 1984)
1918 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், இடச்சு வானியலாரும். கணிதவியலாளர் (இ. 2000)
1918 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய மார்க்சியப் புலமையாளர் (இ. 1993)
1923 – சலில் சௌதுரி, இந்திய இயக்குநர், இசையமைப்பாளர் (இ. 1995)
1928 – தாரா சிங், இந்திய மற்போர் வீரர், நடிகர், அரசியல்வாதி (இ. 2012)
1932 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர் (இ. 2009)
1933 – ஜேக் வெல்ச், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
1936 – அரவிந்த் பட்நாகர், இந்திய வானியலாளர் (இ. 2006)
1938 – டெட் டேர்னர், அமெரிக்கத் தொழிலதிபர்
1939 – எஸ். எம். கார்மேகம், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2005)
1951 – க. பத்மநாபா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நிறுவனர் (இ. 1990)
1951 – சீனத் அமான், இந்தியத் திரைப்பட நடிகை
1954 – அப்துல் பத்தா அல்-சிசி, எகிப்தின் 6வது அரசுத்தலைவர்
1961 – விவேக், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 2021)
1961 – மெக் ரையன், அமெரிக்க நடிகை
1975 – சுஷ்மிதா சென், இந்தித் திரைப்பட நடிகை
1976 – அருண் விஜய், தமிழகத் திரைப்பட நடிகர்
1976 – ஜேக் டோர்சி, அமெரிக்கத் தொழிலதிபர், டுவிட்டரை ஆரம்பித்தவர்களில் ஒருவர்
1986 – சுவேதா மோகன், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி

இறப்புகள்

1998 – டெட்சுயா ஃபுஜித்தா, யப்பானிய வானிலை அறிஞர் (பி. 1920)
2008 – எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919)

சிறப்பு நாள்

பன்னாட்டு ஆண்கள் நாள்
மாலி – விடுதலை நாள்
இந்திய தேசிய ஒருமைப்பாட்டு தினம்
உலகக் கழிவறை நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!