இன்றைய ராசி பலன்கள் (நவம்பர் 19 செவ்வாய்க்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் நவம்பர் 19-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 19.11.2024 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 10.00 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று இரவு 07.15 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.அனுஷம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர் காலத்துக்குப் பயன் தரும் வகையில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவல கத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டி இருக்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

யதார்த்தத்தில் எதைக் காண விரும்புகிறீர்களோ அதில் உங்கள் எண்ணங்களையும் சக்தியையும் டைவர்ட் பண்ணுங்கள். கற்பனை மட்டும் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. உங்களிடம் இதுவரை இருக்கும் பிரச்சினையே, ஆசைப் படுகிறீர்களே தவிர, எந்த முயற்சியும் செய்வதில்லை என்பதுதான். இன்று நீங்கள் கொடுத்த பணத்தை நீங்கள் திரும்பப் பெற முடியும் என்பதால் நீங்கள் இன்று இரவில் பணம் பெறுவீர்கள். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் – மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும்.  அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப் பதால் சோர்வாக இருப்பீர்கள். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சலுகைகள் கிடைக்கும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

சிம்ம ராசி அன்பர்களே!

சிறிது உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள் – உங்களைப் பற்றி நன்றாக உணருவதற்கான நேரம் இது – தினமும் அதை வழக்கமாக்கிக் கொண்டு, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். இந்த நாளில் பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது, எனவே பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் நீங்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறீர்களோ, அது உங்களுக்கு நல்லது நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும்.

கன்னி ராசி அன்பர்களே!

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

துலா ராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவல கத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் பணியாளர் களால் சிறுசிறு சங்கடங்களும் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து உதவி செய்வார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் உதவி கிடைப்பதால் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்பு ஒன்றை ஏற்கவேண்டி வரும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பாக்கித் தொகை வசூலாகும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மகர ராசி அன்பர்களே!

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிகளை உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபா ரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணியா ளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பது உற்சாகம் தரும்.

மீனராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!