மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார் ‘டி. கிருஷ்ணகுமார்’..!

 மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகிறார் ‘டி. கிருஷ்ணகுமார்’..!

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால், ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன.

இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் தடை செய்யப்பட்டது. இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. இந்நிலையில், சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேலும், மணிப்பூர் கலவரம் தொடர்பாக NIA விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...