பிரபஞ்ச அழகியாக டென்மார்க்கை சேர்ந்த ‘விக்டோரியா கெயர் தெல்விக்’ தேர்வு..!

டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் என்கிற மாடல் பிரபஞ்ச அழகி பட்டத்த வென்றுள்ளார்.

2024 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி பட்டத்திற்கான போட்டி கடந்த சில நாள்களாக மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் டென்மார்க், வெனிசுலா, மெக்சிகோ, நைஜீரியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்த மாடல்கள் பங்குபெற்றனர்.

ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்த டென்மார்க் அழகி விக்டோரியா கெயர் தெல்விக் வயது 21. பொதுவாக பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்வதற்கு முன் இறுதிச் சுற்றில் பங்கேற்ற அழகிகளிடம் நடுவர்கள் கேள்வி கேட்பது வழக்கம். இந்த கேள்விக்கு தேர்வு செய்யப்பட்ட அழகிகள் அளிக்கும் பதில்கள் உலகளவில் கவனம் பெறுவது உண்டு.

இந்த நிலையில் இறுதிச்சுற்றில் நடுவர்களின் கேள்விக்கு, பதில் அளித்த டென்மார்க் அழகி விக்டோரியா கெயர் “நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும் அதை உங்கள் பலமாக மாற்ற நீங்கள் அதனை தேர்வு செய்ய வேண்டும்.” எனப் பதிலளித்துள்ளார்.

இந்த பதிலால் கவரப்பட்ட நடுவர்கள் இந்தாண்டின் பிரபஞ்ச அழகியாக விக்டோரியா கெயர் தெல்விக்கை அறிவித்தனர். இவரே டென்மார்க்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரபஞ்ச அழகியாவார். புதிய வரலாற்று சாதனை படைத்த விக்டோரியா தொழில்முனைவராகவும் இருக்கிறார். இரண்டாவது இடம் நைஜீரியாவை சேர்ந்த சிடிம்மா அடெட்ஷினாவுக்கும் மூன்றாவது இடம் மெக்சிகோவை சேர்ந்த மரியா ஃபெர்னாண்டாவுக்கும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!