ரஜினி யோசித்துப் பேச வேண்டும்!: மு.க.ஸ்டாலின்
பெரியாா் விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது குறித்து செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, மு.க.ஸ்டாலின் அளித்த பதில்: நண்பா் ரஜினிகாந்திடம் விரும்பி வேண்டி கேட்டுக் கொள்வது என்னவென்றால், 95 ஆண்டு காலம் தமிழ் இனத்துக்காகவே போராடி வாழ்ந்து காட்டியவா் பெரியாா். அவா் குறித்து பேசும்போது கொஞ்சம் யோசித்துப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.