நீண்ட ஆயுளையும், உடல்நலத்தையும் செய்ய வேண்டியவை
வாழ்க்கைமுறை ஆரோக்கியமானதாக இருந்தால் புற்றுநோய், இதயக் கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோய் இல்லாமல், ஆயுள் பெண்களுக்கு 10 ஆண்டுகளும், ஆண்களுக்கு ஏழு ஆண்டுகளும் அதிகரிக்கும் என்று உடல்நலம் குறித்த ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும், மது குடிப்பதை மிதமான அளவுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும், உடல் எடை ஆரோக்கியமான நிலையில் இருக்க வேண்டும், உணவு வகைகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும், புகைபிடிக்கக் கூடாது என்று பல ஆலோசனைகள் இதில் கூறப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 111,000 பேரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காணித்து வந்தனர். இந்த ஆய்வில் ”பொது மக்களுக்கு ஆக்கபூர்வமான தகவல் கிடைத்துள்ளது” என்று பாஸ்டனில் உள்ள பொது சுகாதாரத்துக்கான ஹார்வர்டு கல்லூரியைச் சேர்ந்த, இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்திய டாக்டர் பிராங் ஹியு கூறியுள்ளார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது என்ன?
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம், அவர்களின் 50வது வயதில் பின்வரும் ஐந்து விஷயங்களில் நான்கு விஷயங்களை பின்பற்றுகிறீர்களா என்று கேட்கப்பட்டது.
•ஒருபோதும் புகை பிடித்ததில்லை
•ஆரோக்கியமான, சமச்சீரான உணவு வகைகள்
•தினமும் 30 நிமிடங்கள் மிதமான அல்லது தீவிரமான உடல் இயக்க செயல்பாடுகள்
•பி.எம்.ஐ. அளவு (உயரத்துக்கு ஏற்ற எடைக்கான அளவீடு) 18.5 க்கும் 24.9 க்கும் இடையில் உள்ளது
•பெண்கள் சிறிய கிளாஸில் ஒயின், ஆண்கள் சுமார் அரை லிட்டர் பீர் தவிர வேறு குடிப்பழக்கம் இல்லாதிருத்தல்.
ஆரோக்கியமான உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் முக்கியமானவை. 34 ஆண்டுகள் வரை வாழும் பெண்களில் புற்றுநோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம், நீரிழிவு போன்ற நோய்கள் இல்லாத பெண்களை கணக்கெடுத்தால், மற்றவர்களைக் காட்டிலும், மேற்படி வாழ்ந்தால் மற்றவர்களைவிட 10 ஆண்டுகள் வரை கூடுதலாக வாழ்கிறார்கள். மேலும் 31 ஆண்டுகள் வரை வாழும் ஆண்களில், இந்தப் பிரிவினர் கூடுதலாக ஏழு ஆண்டுகள் வாழ்கிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஏன் வித்தியாசம் உள்ளது?
சராசரியாக ஆண்களைவிட பெண்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள் என்ற உண்மையுடன் தொடர்புடையதாக அது இருக்கலாம்.இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் மிக ஆரோக்கியமாக உள்ள ஆண்களும், பெண்களும் ஒருபோதும் புகைபிடிக்காதவர்களாக உள்ளனர்.