பாரம்பரிய மிட்டாய்களும் அதன் பயன்களும்
கடலை மிட்டாய் கரும்பு சாறில் இருந்து கிடைக்கும் வெல்லத்தையும் வேர்க்கடலையும் சேர்த்து தயாரிக்கப்பட்டுவது கடலை மிட்டாய். வேர்க்கடலையில் புரதம் கொழுப்பு நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வாந்தி உடல்சோர்வு மனஅழுத்தம் போன்றவற்றைப் போக்க உதவுகின்றன. வெள்ளத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்தசோகையைத் தவிர்க்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும்.
எள்ளு மிட்டாய் கருப்பு எள் மற்றும் வெள்ளம் கலந்து தயாரிக்கப்படுகிறது. வெள்ளத்தில் இரும்புச்சத்தும் எள்ளில் கால்சியமும் நிறைந்துள்ளன. இது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்தசோகையைப் போக்கும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கலைப் போகும். மாதவிடாய்க் கோளாறுகளை சரி செய்யும்.
பொரி உருண்டை கார்போஹைட்ரேட் இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன இது உடலுக்கு ஆற்றலைத் தருகிறது செரிமானத்துக்கு உதவுகிறது இதை இருக்கும் சுக்கு உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கிறது.
இஞ்சி முரப்பா இதன் மூலப்பொருளே இஞ்சியும் வெள்ளமும் தான் இஞ்சியில் உள்ள சத்துக்கள் உடல் வலி குமட்டல் பசியின்மை ஆகியவற்றை எதிர்த்து போராடும் வல்லமை வாய்ந்தது சாப்பிட்ட பின் இஞ்சி முரப்பா சாப்பிடுவது செரிமானது நல்லது உடலுக்கு புத்துணர்ச்சியும் தரும்.
சில்லுக்கருப்பட்டி கருப்பட்டி தயாரிப்பின் கடைசியில் சுக்கு ஏலக்காய் கலந்து சில்லுக்கருப்பட்டி தயாரிக்கிறார்கள் இதிலுள்ள கால்சியத்தின் பற்களும் எலும்புகளும் வலுவடைகின்றன. பதின் பருவப் பெண்களுக்கு சில்லுக்கருப்பட்டியில் உளுந்தங்களி செய்து கொடுத்தால் கர்பப்பை மற்றும் இடுப்பு எலும்பு வலுவடையும்.