இன்றைய ராசி பலன்கள் – 05-01-2020 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள்
கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : அறிமுகம் உண்டாகும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
——————————————————–
ரிஷபம் :
உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். உடன் பணிபுரியும் ஊழியர்களிடம் நிதானம் வேண்டும். விலை
உயர்ந்த பொருட்களை கையாளும்போதுகவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : பொறுமையை கடைபிடிக்கவும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : எண்ணங்கள் தோன்றும்.
——————————————————–
மிதுனம் :
பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். அரசாங்கத்தின் அனுகூலத்தால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள். உயர் பதவி கிடைப்பதற்கான சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
——————————————————–
கடகம் :
உறவினர்களின் ஆதரவால் சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் மகிழச்சி உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : சுபிட்சமான நாள்.
பூசம் : இலாபம் உண்டாகும்.
ஆயில்யம் : சேமிப்பு உயரும்.
——————————————————–
சிம்மம் :
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக காரியங்களை மேற்கொண்டால் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஆதரவான நாள்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
——————————————————–
கன்னி :
வாகனப் பயணங்களின்போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். செய்யும் பணிகளில் சற்று கவனமாக
செயல்படவும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவச்சொல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : நிதானத்துடன் செயல்படவும்.
சித்திரை : அவச்சொல் உண்டாகலாம்.
——————————————————–
துலாம் :
இளைய உடன்பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். அரசாங்க அதிகாரிகளால் எதிர்பார்த்த அனுகூலமான பணிகள் முடியும். ஆன்மிகம் சம்பந்தமான பயணங்களால் மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
சுவாதி : பொறுமையுடன் செயல்படவும்.
விசாகம் : நிம்மதி கிடைக்கும்.
——————————————————–
விருச்சிகம் :
தொழிலில் புதிய நபர்களின் வருகையால் எண்ணிய இலாபம் கிடைக்கும். உயரமான இடங்களுக்கு பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சாதுர்யமான பேச்சுக்களால் இன்னல்களை களைவீர்கள். வாகனங்களை பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
கேட்டை : செலவுகள் நேரிடும்.
——————————————————–
தனுசு :
உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் பொருள் இழப்பு
ஏற்படும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். புதிய திட்டங்களை
செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை
மூலம் : சாதகமான நாள்.
பூராடம் : சுபவிரயம் உண்டாகும்.
உத்திராடம் : சோர்வு நீங்கும்.
——————————————————–
மகரம் :
புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.
வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.
திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
——————————————————–
கும்பம் :
தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். நிறுவனங்களில் புதிய நபர்களுக்கு வாய்ப்பு அளிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : விருப்பங்கள் ஈடேறும்.
சதயம் : இலாபம் கிடைக்கும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
——————————————————–
மீனம் :
தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். புதிய
நபர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க முயல்வீர்கள். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
பூரட்டாதி : எதிர்ப்புகள் குறையும்.
உத்திரட்டாதி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்.
——————————————————–
      – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...