வரலாற்றில் இன்று – 05.01.2020 – ஷாஜகான்
இந்தியாவில் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஹாபுதீன் முகம்மது ஷாஜகான்.
627ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை இறந்ததை தொடர்ந்து இவர் முகலாய பேரரசின் மன்னராக அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.
ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹால் மிகவும் பிரபலமானது. இது இவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது.
433 ஈரோஸ் என்ற சிறுகோள் மீதுள்ள ஒரு நிலக்குழிக்கு ஷாஜகான் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. இவர் 1666ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி மறைந்தார்.