கொள்ளு கஷாயம்.:

 கொள்ளு கஷாயம்.:
தேவையான பொருட்கள்.:
கொள்ளு – ஒரு கப், 
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்,
இந்துப்பு – தேவையான அளவு.

செய்முறை.:

வெறும் வாணலியில் கொள்ளு, சீரகத்தைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். 
ஆறிய பிறகு மிக்ஸியில் பொடியாக அரைக்கவும். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் கொதிக்கவைத்துப் பருகலாம் (தேவைப்பட்டால் மட்டும் இந்துப்பு சேர்க்கவும்).

பயன்கள: வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு நீங்கி, சதை குறையும். 

காலை, மாலை என இருவேளையும் குடிக்கலாம். (மாதவிடாய் நேரங்களில் பருக வேண்டாம்).

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...