அனைவருக்கும் இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்
ஆடி 18 ஆம் பெருக்கு நன்னாளை பற்றி பார்ப்போம் .. ஆடி பெருக்கு என்பது நம் தமிழர்களால் ஆடி மாதம் 18 ஆம் நாளன்று கொண்டாடப்படும் விழா ஆகும்.
இதை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைப்பார்கள். நம் முன்னோர்கள் தமிழ் விழாக்களை நாள்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. விண்மீன்களையும், கிழமைகளையும் அடிப்படையாக கொண்டு ஆடி பெருக்கு நடத்தப்படுகிறது.
ஆடி மாதத்தில் 18 வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நம் தமிழர்களால் நடத்தப்படும் ஒரே விழா ஆடி பெருக்காகும். ஆடி மாதத்தில் பருவமழை பெய்வதும் ஆறு, குளம், ஏரிகள் தண்ணீரால் நிரம்பி பயிர்கள் செழிப்பாக இருக்கக்கூடிய மாதம் தான் ஆடி மாதம். அதனால் தான் ஆடி மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புது வெள்ளம் பெருகுவதால் ஆடி பெருக்கு என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். உள்ளவர்கள் இந்த நன்னாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது அவர்கள் நெல், கரும்பு போன்றவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அவற்றை அறுவடை செய்யமுடியும்.
இதனால் தான் நம் முன்னோர்கள் “ஆடி பட்டம் தேடி விதை” என்று கூறியுள்ளார்கள். ஆடி வரும் ஆற்று நீராய் ஊறி வரும் ஊற்று நீராய் சொந்தங்கள் பெருகிட பந்தங்கள் நெருங்கிட அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் ஆடிப்பெருக்கு திருநாளில் குறையாத செல்வமும் குறைவில்லாத உறவுகளும் இனிதே பெருகிட இனிய ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்