“கதைப்போமா வாங்க” மூன்றாம் நிகழ்வு மற்றும் “தற்கொலை தாகங்கள்” கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா..!
திருநங்கை ஸ்வேதா ஏற்பாடு செய்த கதைப்போமா வாங்க மூன்றாம் நிகழ்வு (29 ஜூன் 2024) மாலை தரமணியில் உள்ள ஸ்பேஸிக் சொசைட்டி அரங்கத்தில் நடைபெற்றது.
முதலில் மூன்று திருநங்கைகள் தன் வாழ்க்கை அனுபவத்தை கவிதையாக படைத்து வாசித்தும் காட்டினர். அரங்கத்தில் வீற்றிருந்தவர்க்கு திருநங்கையின் வரவேற்பு நடனம் அரங்கத்தில் வீற்றிருந்த அனைவரையும் கவர்ந்தன,
மாலை பொழுதில் நடந்த இந்த விழா மிகவும் அர்த்தமுள்ளதாக ஸ்வேதா உருவாக்கி இருந்தார்.
ஏஞ்ஜலின் பவன், பாவனா, அருண்கார்த்திக், சாதனா, அகிலா, பிரகதி, சிவன், தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி தான் பெண்ணாக அல்லது ஆணாக உணரத் தொடங்கிய தருணம் என ஒவ்வொருவராக விவரிக்க ஆரம்பித்தனர். ஏஞ்சலின் தன்னுடைய இளம் வயதில் ஹார்மோன் மாற்றத்தினால் ஆணாக இருந்து பெண்ணாக உணரத் தொடங்கினார் இருந்தாலும் தன்னுடைய மாற்றத்தை வெளிக்காட்டாமல் அவருடன் பிறந்த சகோதரி அவர்களின் வாழ்க்கைத்துணை வரும் வரை பொறுத்திருந்து அதன் பிறகு அவர் வீட்டாரிடம் தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
வீட்டை விட்டு வெளியேறிய ஏஞ்ஜலின் அனைத்து திருநங்கைகள் போலவே பல இன்னல்களை இந்த சமுதாயத்தில் சந்தித்து பிறகு போண்டுவின் ஸ்வேதா அவர்களின் துணையுடனும் அறிவுறுத்தலினாலும் கற்றறிந்து ஒரு ஸ்தாபனத்தில் பணிபுரிந்து தன் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து மற்ற திருநங்கைகளுக்கு ஓர் உதாரணச்சின்னமாக திகழ்கிறார்.
அருண்கார்த்திக், இவர் பெண்ணாகப் பிறந்து பார்மோனல் மாற்றத்தினால் ஆணாக உணரத் தொடங்கினார் அது தெரியாமல் அவர் பெற்றோர்கள் அவருக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்த போது அதை வெறுத்து தன் வீட்டாரிடம் தன் நிலை பற்றி கூறியதும் அவருடைய தந்தை அருண்கார்த்திக்கை கொலை செய்யவும் முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் அவர் தன்னை ஆணாக காண்பிக்க மார்பக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஆணுறுப்பு பொருத்தும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் அதனால் பல இன்னல்களை சந்தித்தார்.
மூன்றாம் பாலினத்தவர்கள் சமுதாயத்தால் ஒடுக்கப்பட்டு அவர்கள் தவறான பாதையில் பயணிக்கிறார்கள் நாம் அவர்களை ஆதரித்தால் அவர்கள் தவறான பாதை செல்லாமல் தடுக்க முடியும்.
மூன்றாம் பாலினத்தவர்களின் பெற்றோர்களும் குடும்பத்தாரும் மற்றும் சமுதாயத்தாரும் இது ஒரு இயற்கை நிகழ்வு என்று மனதில் கொண்டு அவர்களைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் அப்படி ஒன்று நிகழ்ந்தால் மட்டுமே சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் வாழ்வில் வெற்றி நடை போட முடியும்.அப்படி பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் நன்றாக படித்து நல்ல ஸ்தாபனங்களில் பணிபுரிகிறார்கள். இன்று அரசாங்கமும் அதற்கென சிறப்பு சலுகைகள் வழங்குகின்றன.
கதைப்போமா வாங்க நிகழ்விற்கு வந்திருந்த விருந்தினர் ஏழு பேருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
திருநங்கை ஸ்வேதா அவர்கள் திருநங்கை சமுதாயத்திற்கு ஆற்றும் பணி அளப்பரியது திருநங்கை ஸ்வேதா தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து திருநங்கைகளையும் ஒன்றிணைக்கிறார். திருநங்கை சுவேதா தேடி வரும் அனைத்து திருநங்கைகளையும் வாழ்வில் மேம்படும்படி அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் வழி செய்கிறார் மற்றும் அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கை அளிக்கிறார். இந்த சமுதாய பணி மிகவும் தேவையானதும் அவசியமானதும் கூட..,
இதற்கு அடுத்து எழுத்தாளர் லதா சரவணன், ஓவியர் ஷ்யாம், நடிகை மிலா பேபி கேர்ள், நடிகை ரேகா மற்றும் சிவசங்கர் ஜெகதீசன் இணைந்து ஸ்வேதாவின் தற்கொலை தாகங்கள் கவிதை தொகுப்பை வெளியிட்டார்கள்.
பிறகு பெங்களூரில் இருந்து வந்த திருநங்கைகள் திரைப்பாடல்களுக்கு சிறப்பாக நடனம் ஆடினார்கள். மேலும் திருநங்கைகள் பற்றிய ஒரு அழகான மைம் நாடகம் ஒன்று நடந்தேறியது.