மழை காலம் – சளியை போக்குவதில் சுக்கு முதலிடம் வகிக்கின்றது
மழை காலம் ஆரம்பித்தாலே சளி தொந்தரவும் சேர்ந்தே ஆரம்பித்து விடும்.சளி ஒரு புறம் என்றால் இருமல் ஒரு புறம் பாடாய் படுத்தும்.
பொதுவாக சளி இருமல் போன்றவற்றிற்கு மாத்திரை,மருந்து சாப்பிடாமல் கஷாயம் சாப்பிட்டால் சீக்கிரம் போய் விடும் என்று நம் பாட்டிகள் சொல்வர்.ஆனால் நம் குழந்தைகளை கஷாயம் சாப்பிட வைப்பதற்குள் நமக்கு காய்ச்சல் வந்து விடும்.உண்மை தானே! என் வீட்டிலும் இதே கதைதான்.என் குழந்தைகள் கஷாயம் என்றாலே பத்து அடி ஓடி விடுவார்கள்.இவர்களுக்கு பிடித்தார் போல எப்படி செய்து கொடுக்கலாம் என்று யோசித்தபொழுது கண்ணில் பட்ட ரெசிபிதான் இந்த ஹோம் மேட் இருமல் மிட்டாய்.இதில் சுக்கு,ஏலக்காய்,எலுமிச்சை,நாட்டு சர்க்கரை,கிராம்பு மற்றும் தேன் ஆகியவை கலந்துள்ளது.இவற்றில் இயற்கையாகவே சளி மற்றும் இருமலை போக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. “சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை” என்ற பழமொழிக்கேற்ப சளி மற்றும் இருமலை போக்கும் எண்ணற்ற நற்குணங்களை அடங்கியது சுக்கு. சித்த மருத்துவத்திலும் சளியை போக்குவதில் சுக்கு முதலிடம் வகிக்கின்றது.
ஏலக்காயில் ஆன்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளது.மேலும் சிறந்த வலி நிவாரணி ஆகும். கிராம்பு கிருமிகளை எதிர்த்து போராடும் தன்மை நிறைந்தது.
தேன் அருந்துவதால்
கடுமையான இருமல் குறையும். தொண்டைகட்டு மாற்று தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளும் நீங்கும்.
நாட்டுச்சர்க்கரை உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதற்கும் ,உடல் சூட்டை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகின்றது.