எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்…
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? அடுத்த 24 மணி நேரம்…
தமிழகத்தில் அடுத்த 24 மணிநேர மழை நிலவரம் குறித்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பது குறித்தும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய புவியரசன், “தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாமக்கல், சேலம், தூத்துக்குடி, ராமநாதபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் .தமிழகத்தைப் பொறுத்தவரை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 43 சதவீதம் மழை பெய்துள்ளது.
இது இயல்பை விட 5 சதவீதம் அதிகம் ஆகும். இதுவரை அதிகபட்சமாக கடலூர் மற்றும் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 8 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் மணிமுத்தாரில் 4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.குறைந்தபட்ச மழையாக புதுவையில் 28 செ.மீ., வேலூர் 26 செ.மீ, பெரம்பலூர் 24 செ.மீ., மதுரை 23 செ.மீ., திருவண்ணாமலையில் 21 செ.மீ., சென்னை 13 செ.மீ. மழை பெய்துள்ளது.அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை ஆக 30 டிகிரி செல்சியஸும் குறைந்த பட்ச தண்டனையாக 25 டிகிரி செல்சியஸும் பதிவாகக்கூடும்”
என்று தெரிவித்தார்.