சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு வைரல் புகைப்படங்கள்..!

 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு வைரல் புகைப்படங்கள்..!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்த நிலையில்,  அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார்.  லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி,  சென்னை,  மும்பை,  திருநெல்வேலி,  பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடந்தது.

கடைசியாக பாண்டிச்சேரியில் ஒரு சண்டை காட்சி படமாக்கப்படுவதாகவும் அதற்காக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியனது.   இதனிடையே படப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மேலும் மும்பை படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினிகாந்த்.  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.  அதில் கூலி எனப் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  ஜூனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 29ம் தேதி ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார்.  உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று (மே.31) சாமி தரிசனம் செய்தார்.  இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...