உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியும்
தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியும் – உச்ச நீதிமன்றம். வேண்டுமெனில் மாற்றம் செய்யப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வையுங்கள் – தமிழக அரசு வாதம். “பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது” – உச்ச நீதிமன்றம். எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? – நீதிபதிகள் மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? என நீதிபதிகள் கேள்வி
இத்தனை ஆண்டுகள் ஏன் தேர்தல் நடத்தாமல் இருந்தீர்கள்? நாடாளுமன்றம் என்ன விதி வகுத்துள்ளதோ அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும்.
குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது.தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தபின், எந்த நீதிமன்றத்தாலும் தள்ளி போட முடியாது – தமிழக அரசு.தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளி போட முடியும் – நீதிபதிகள். 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை ஒத்தி வைத்தால் குழப்பம் ஏற்படும் – திமுக. வேண்டுமானால் உள்ளாட்சி தேர்தலை தமிழகம் முழுக்க ஒத்தி வையுங்கள் – திமுக தரப்பு வாதம்.
வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கலாம் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்.