உள்ளாட்சி தேர்தல் – திமுக வழக்கு விசாரணை விசாரணை தொடங்கியது.
உள்ளாட்சி தேர்தல் – திமுக வழக்கு விசாரணை விசாரணை தொடங்கியது. வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன – திமுக தரப்பு வாதம். மாவட்ட தேர்தல் அதிகாரிதான், தொகுதி வரையறை அதிகாரியாகவும் உள்ளார் – திமுக. தொகுதி வரையறை உள்ளிட்ட சட்ட விதிகளை பின்பற்றாமல் தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது – திமுக.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? – நீதிபதிகள். அதை செய்ய வேண்டியதில்லை – மாநில தேர்தல் ஆணையம். ஏன் – நீதிபதிகள்.
தொகுதி மறுவரையறை பணிகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்துள்ளோம். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்ய முடியும் – தேர்தல் ஆணையம்.ஏற்கனவே உள்ள மாவட்டத்தின் வார்டுகள் புதிய மாவட்டங்களுக்கு எப்படிப் பொருந்தும் ? – தலைமை நீதிபதி கேள்வி. ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – தலைமை நீதிபதி. தொகுதி மறு வரையறை, இட ஒதுக்கீடு என எல்லா பணிகளும் நிறைவடைந்து விட்டது – மாநிலத் தேர்தல் ஆணையம்.