பாஜக.வுக்கு தாவினார் நமீதா: ராதாரவி 7-வது ஜம்ப்!
நடிகர் ராதாராவி இன்று பாஜக.வில் இணைந்தார். திராவிட இயக்கத்தில் ஊறிய நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகனான அவர், பாஜக.வில் இணைந்திருப்பது திராவிட இயக்கத்தினரை அதிர வைத்திருக்கிறது. ராதாரவி கட்சி மாறுவது இது 7-வது முறை ஆகும். நடிகை நமீதாவும் இன்று அதிமுக.வில் இருந்து பாஜக.வுக்கு தாவினார். நடிகவேள் எம்.ஆர்.ராதா, தமிழக வரலாற்றில் நீடித்த பெயரைப் பெற்றவர். பகுத்தறிவுப் பரப்பும் வசனங்களை சினிமாவில் பேசி நடித்தது மட்டுமன்றி, தந்தைப் பெரியாரின் பெருந்தொண்டராகவும் இயங்கியவர். இன்றும் பெரியார் திடலில் நடிகவேள் பெயரில் அரங்கம் இருப்பது அதற்கு சாட்சி. நடிகவேளின் மகன் ராதாரவி அந்த அளவுக்கு சுய மரியாதை கருத்துகளுக்கு சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும், திரையுலகின் தனக்கென இத்தனை ஆண்டுகளாக தனி இடத்தை தக்க வைத்து வருபவர். தந்தையின் தொடர்ச்சியாக அரசியலிலும் ஏதாவது ஒரு திராவிட இயக்கத்தில் இயங்கி வந்தார். தொடக்கத்தில் திமுக.வில் இயங்கிய ராதாரவி, வைகோ விலகலுக்கு பிறகு மதிமுக.வில் இணைந்தார். மதிமுக பெரிதாக சோபிக்காததால் மீண்டும் திமுக.வுக்கு வந்த அவர், தனது வீடு ஏலத்திற்கு வந்த பிரச்னையில் கருணாநிதி உதவி செய்யாததால் அதிருப்திக்கு உள்ளானார். பின்னர் அதிமுக.வில் இணைந்து, 2002-ல் சைதாப்பேட்டை இடைத்தேர்தலில் நின்று ஜெயித்தார். ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் . மீண்டும் திமுக பக்கம் சென்ற ராதாரவி, நயன்தாராவை விமர்சித்த விவகாரத்தில் அங்கு நெருடல் உருவாகி வெளியே வந்தார். மீண்டும் அதிமுக பக்கம் வந்தார்.
இப்போது 7-வது முறையாக ராதாரவி, பாஜக.வில் இணைந்திருக்கிறார். பாஜக.வின் தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னை வந்த நிலையில் அவரை சந்தித்து, தன்னை இணைத்துக் கொண்டார்
ராதாரவி. நடிகவேளின் மகன் பாஜக.வில் இணைந்திருப்பது, திராவிட இயக்கத்தினர் மத்தியில் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதிமுக.வில் இருந்து வந்த நடிகை நமீதாவும் இன்று ஜே.பி.நட்டா முன்னிலையில் அதிமுக.வில் இணைந்தார். அதிமுக அணியில் பாஜக நீடித்து வரும் நிலையில் தமிழக ஆளும் கட்சியான அதிமுக.வில்இருந்து இரு முக்கிய பிரசார பீரங்கிகள் விலகியிருப்பது அந்தக் கட்சி வட்டாரத்திலும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.