முக்கிய செய்திகள்

 முக்கிய செய்திகள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வரும் 10ம் தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது. கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம். 

மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கான ஆன்லைன் பதிவு, நாளை முதல் தொடங்குகிறது. 

அதிகாரப்பகிர்வில் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – திமுக தலைவர் ஸ்டாலின். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்.

எகிப்தில் இருந்து இம்மாத இறுதிக்குள் 6,090 மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் , துருக்கியில் இருந்து 11 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் ஜனவரிக்குள் இறக்குமதி செய்யப்படும் – மத்திய அரசு.

நவம்பர் மாதத்தில் ரூ.1.03 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது – மத்திய அரசு

உள்ளாட்சித்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு! உள்ளாட்சித்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல். உள்ளாட்சித்தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடிந்ததால் நாளை அறிவிப்பு வெளியாகலாம் என தகவல். 

திருப்பூர்: தென்னம்பாளையம் சந்தையில், செயற்கை முறையில் பழுக்க வைத்த 1 டன் வாழைப்பழங்கள் பறிமுதல் – உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை. 

8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெறவிருந்த தேசிய திறன் மேம்பாட்டுத் தேர்வு ஒத்திவைப்பு – அரசுத்தேர்வுகள் இயக்ககம். 

பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – டிசம்பர் 2-ம் தேதி விசாரணை.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...