வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை:
வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை: 12 புள்ளிகளைத் தொட்ட நிப்டி!
வரலாறு காணாத உச்சமாக சுமார் 500 புள்ளிகள் அதிகரித்து பங்குச்சந்தை சென்செக்ஸ் 40,889.23 புள்ளிகளாக நின்றது.
உலோகம், வங்கித்துறை, டெலிகாம் பங்குகள் ஆகியன சர்வதேச அளவில் நல்ல உயர்வு பெற்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 529.82 புள்ளிகள் அதிகரித்து 40,889.23 புள்ளிகளாக நின்றது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 159.35 புள்ளிகள் உயர்ந்து 12,073.75 புள்ளிகளாக நின்றது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.69 ரூபாய் ஆக உள்ளது.