உருகுதலும்பின்பு மறுதலிப்பதும்/-பிரபா அன்பு-
பின்பு மறுதலிப்பதும்
இறுதி மடலாய் வரைகிறேன்
மீண்டும் ஒரு முறை
என் கண்முன் வந்துவிடாதே
அன்று
காத்திருக்கும் தருணங்கள்
மகிழ்வானவை என்றாய்
இன்று
எனது அழைப்பை நீ
துண்டித்துவிடும்போது
என் மனம் மௌனமாக அழுவதை
உன்னால்
உணர்ந்திட முடியாதுதான்
ஒரு அன்பை
தக்கவைத்துக்கொள்ள
எவ்வளவு பிரயத்தனங்கள்
இந்த அர்த்தமற்ற
நேசத்துக்காகவா
இத்தனை குறுந்தகவல்கள்
இத்தனை உரையாடல்கள்?
உன்னை நான்
இவளவுக்கு நேசித்திருக்கக்கூடாதுதான்
உனக்காக
இவளவு கண்ணீரும்
சிந்தியிருக்கக்கூடாதுதான்
இந்த
பிரிவின் பின்னர்
உன்னைப் பார்க்கையில்
எனக்கு
அழுகை வராமலில்லை
உன் முன் அழக்கூடாதென்ற வைராக்கியத்தில்தான் இருக்கிறேன்
வெகு சீக்கிரத்தில்
பாழடைந்த உன் மனமெனும்
இருண்ட குகையில் இருந்து
வெளியேறிவிடுவேன்
உருகுதலும்
பின்பு மறுதலிப்பதும்
சாபத்தின் இரு கோடுகளாகிவிட்டன.
–பிரபா அன்பு-