நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும் !!!

நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!!

           உள்ளாட்சி பதவிகளில் மறைமுகத் தேர்தலுக்கு வழிவகுக்கும் அவசர சட்டத்தை எதிர்த்து வழக்கு. அரசின் குளறுபடியால் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

            இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் ஆட்சியாளர்களே…

***********************************************************************

           விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய முடியாது. மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

           ஆயிரக்கணக்குல வாங்குன கடன்களை தள்ளுபடி செஞ்சா இந்தியப்பொருளாதாரம் என்ன ஆகுறது? கோடிக்கணக்கில வாங்கியிருந்தா… ஏமாத்திட்டு வெளிநாடு போனா…. தள்ளுபடி செய்யறதுக்கு நல்லா இருக்கும்.

**********************************************************************

                                   எப்படி நடந்தாலும் மக்கள் தானே ஓட்டுப் போடுகிறார்கள்?! உள்ளாட்சித் தேர்தலை சட்டரீதியாக தடுத்து நிறுத்த முடியாது. முதல்வர் எடப்பாடி உறுதி.

              அப்படியாங்க  அய்யா …. கொஞ்ச நாளா நாங்க கூட வாக்கு எந்திரமே ஓட்டு போடுதுன்னு நினைச்சோம்……அது சரி…. அது என்னங்கய்யா எப்படி நடந்தாலும்……ஏதோ இடிக்குதே…

************************************************************************

           பாவமா, பஞ்சை பராரியாக, தலைக்கு எண்ணை கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்த உங்களை பார்க்கும் போது எனக்கே பாவமாக இருக்கிறது.– அமைச்சர் செல்லூர் ராஜு

           என்னங்க செய்யறது…..நடக்குற ஆட்சி அப்படி…..

****************************************************************************

          ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு ஆலோசனை குழுவில் சர்ச்சை எம்பி பிரக்யா நியமனம்.

     

             தீவிரவாத பின்னணி இருக்க அந்த குற்றவாளி தேர்தலில் போட்டியிட்டப்பவே  தடுக்க முடியல…. அதுவே ஜனநாயக விதிமீறல் தான் …. யார் கண்டா நாளைக்கு  அமைச்சராக கூட ஆக வாய்ப்பு இருக்கு .

********************************************************************************

         2021ல் நூற்றுக்கு நூறு சதவீதம் மிகப்பெரிய அதிசயம் நடக்கும். மக்கள் நடத்திக் காட்டுவார்கள்.– ரஜினிகாந்த்

         மக்கள் அதிசயத்தை நடத்திக் காட்டுறத பத்தி நீங்க அருள்வாக்கு சொல்லுறது  இருக்கட்டுங்க…… 2021 லயாச்சும் நீங்க கட்சி ஆரம்பிச்சுருவிங்களா….

******************************************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!