மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரம் பள்ளிகள்!
மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரம் பள்ளிகள்!
மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்லாத 67 ஆயிரத்து 902 பள்ளிகள் செயல்படும் அவலநிலை மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது.
போபால் மாநிலம் சரோடிபூராவில் அமைந்துள்ள துவக்கப் பள்ளியில் மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடையாது. 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பறையின் அனைத்து திசைகளிலும் உள்ள சுவர்களில் பலகைகள் அமைத்து நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக புகார் அளித்தும் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பதில் இல்லை என்று அப்பள்ளியின் ஆசிரியர் அனூப் சிங் தெரிவித்தார்.
தலைநகர் போபாலில் மட்டும் இதுபோன்று அடிப்படை வசதிகள் இல்லாத 855 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக அம்மாநில கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சொந்த ஊரான சிந்தவாரா மாவட்டத்தில் மட்டும் இதுபோன்று 2,620 பள்ளிகள் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இதனிடையே அம்மாநிலத்தில் தென் கொரிய நாட்டின் கல்வி முறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டு, மாநில கல்வித்துறை அமைச்சர் பிரபுராம் சௌத்ரி உட்பட சுமார் 130 அதிகாரிகள் வரை தென் கொரியா சென்று அங்குள்ள பள்ளி கல்வி முறையை ஆய்வு செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.