நாப்கின்( சிறு கதை )

 நாப்கின்( சிறு கதை )
  1.  நாப்கின்(சிறு கதை )


நாகர்கோயில்  நீதிமன்றம்  காலை பரபரப்பில் தன்னை தொலைத்து கொண்டு இருந்தது  .. 


ஞானாவும் நானும்  மூன்று சக்கர வாகனத்தில்   நீதி மன்றத்தை நோக்கி   வந்து பயணமாகி கொண்டு இருந்தோம் 

எங்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் நீதிமன்றத்தை முற்றுகை இட்டு முழக்கங்களை எழுப்பி கொண்டு  இருந்தனர் .

 

பெண்ணீய விரோதி ஞானா திரும்பி  போ  பிற்போக்கு சிந்தனைவாதி ஞானா ஒழிக ஒழிக என்ற  முழக்கங்கள் நீதி மன்றம் 

இருந்த சாலை முழுவதும் எதிரொலித்தது  அவைகள் ஞானாவை பாதித்ததாக தெரியவில்லை


மெதுவாக  கேட்டேன்  பெண்கள் உனக்கு எதிராக திரண்டு  இருப்பது  உனக்கு வேதனையாக இல்லையாமௌன புன்னகையோடு  

என்னை பார்த்தான் ..நான் எதிர்பார்த்த ஒன்றுதான் எனக்கு எதிராக நடைபெறுகிறது என்பது போல  இருந்தது அவனின்  மௌன புன்னகை .


மூன்று சக்கர வாகனம்  நீதிமன்ற வளாகத்தில்  நுழைய  எங்கள் மீது செருப்புக்களும் முட்டைகளும் வீசப்பட்டன ..என் மீது எந்த பொருளும் 

 பாடாதபடி அவன் தன் மீது வாங்கி கொண்டான் .கண்ணாடி துகள் அடங்கிய முட்டை ஓன்று  அவனின் முகத்தை பதம் பார்க்க,  கசிந்த ரத்த 

கோடுகள் பெண்கள் அமைப்பினரை அரசியல்வாதியாக காட்டியது .


பிரச்சனைகள் நடைபெறும் இடங்களில் எப்போதும்  வேடிக்கை பார்க்கும்   காவல்துறை,     எங்கள் மீது என்ன கருணையோ தெரியவில்லை

 விரைந்து தலையிட்டு  பெண்கள்அமைப்பிடம் இருந்து   எங்களை  காப்பாற்றி நீதி மன்றத்திற்குள்  அனுப்பி வைத்தது .

 

நீதி மன்ற  வராண்டாவில் அரசாங்கத்தை போல அழுக்கடைந்து கிடந்த,    இருக்கையில்,  நானும் அவனும் அமர வழக்கறிஞர்  அடுத்த வழக்கு 

உங்களதுதான் என்று சொல்லிவிட்டு  போனார் ….என்னை விட்டு கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தது  இருந்தஅவனை பார்த்தேன் , அவன் உடம்பு 

முழுவதும்  முட்டை கழிவுகள் வடிந்து கொண்டு இருந்தது ..


ஞானவிடம் குடிகொண்டு இருந்த  அகிம்சை  எனக்கே வியப்பாக இருந்தது .ஆனால் என்னால்தான்   மௌன சாமியார் ஆகிவிட்டான் என்பது 

எனக்கு தெரியும் .இந்த உலகத்தில் அவன் பெரிதும் நேசிக்கும்  ஜீவன் நான் மட்டும்தான் .என்னோடு கைகோர்த்துக்  நடைபெறவேண்டும் என்ற

 காரணத்திற்காக  கோபத்தை தள்ளி வைத்துக் கொண்டு    இருந்தான்


புலிகளுக்கு  எதிராக  இலங்கையில் நடந்து கொண்டு இருந்த  யுத்தத்தில்  அப்பாவி தமிழ் பெண்கள்  சந்திக்கும்  கொடுமைகளை குறித்து ,கட்டுரை 

ஒன்றை ,நான்  எழுதிட . அக் கட்டுரையை கனடா நாட்டு பத்திரிகைகள் வெளியிட்டு  சிங்கள ராணவத்தின்  கோரா முகத்தை  உலகிற்கு கொண்டு

 சென்றன  .

இதனால்சிங்கள இராணுவத்தின் கோபம் என்மீது திரும்பிட , என்னை  கொல்ல நாட்குறித்தது,அதற்கான பணியை முடுக்கி விட்டன . என் தோழி  

இசையரசியும்..நானும் சிங்கள ராணுவத்திடம் மாட்டிக்கொண்டோம்எங்கள் கைகளை பின்புறமாக கட்டி ,பனைமரங்கள் வளர்த்த தோப்பிற்குள் 

அழைத்து சென்ற  அவர்கள் எங்கள்  வாழ்வின் கடைசி அத்தியாயத்தை எழுத துணிந்தார்கள்   .


முதலில் இசையரசியை முழங்கால் பணியிட்டு நிற்க வைத்து , துப்பாக்கியின் முன்பகுதியில் இருந்த கத்தியால்அவளின் 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...