நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும்!!!!
சோனியா குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ் பி ஜி பாதுகாப்பு வாபஸ் விவகாரம்_ மக்களவையில் காங்கிரஸ் திமுக வெளிநடப்பு .
உள்ள இருந்து மட்டும் நாம என்ன செய்யப் போறோம்??? நாம சொல்லுறததான் யாரு கேக்க போறா???
*************************************
உயர் கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது_ அமெரிக்க துணை தூதர்.
என்னங்க செய்ய? உயர் கல்விக்காக உள்நாட்டில் இருக்க ஐஐடி உள்ள போனாத்தான் உயிருக்கு உத்தரவாதம் இல்லையே?!?!
********************************
தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க அரசு விண்ணப்பம்_ அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
ஏற்கனவே இருக்கிற மருத்துவ கல்லூரிகள்ளே நம்ம புள்ளைங்க படிக்க வழியில்ல…. அதை கொஞ்சம் சரி செய்யுங்கன்னு சொன்னா….
******************************
மாநிலங்களவை காவலர்களின் சீருடைகளை மறு ஆய்வு செய்ய அவைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
அவங்களுக்கும் காவி நிற சீருடை கொடுத்திரலாங்க அய்யா.
**********************************
இந்தியாவில் முதல் செவ்வியல் மொழியாக தமிழ் இருந்தது.2004 ஆம் ஆண்டில் மத்திய அரசு தமிழைச் செவ்வியல் மொழியாக அறிவித்தது. தமிழ் ஒரு சிறந்த பன்முகத்தன்மை கொண்டது என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தமிழகத்திற்கு வந்திருந்தபோது கூறினார் .இதன் மூலம் தமிழ் பழமையான மொழிகளில் ஒன்று என்பது உறுதியாகி உள்ளது._ தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார்.
அடக்கொடுமையே !!!! தமிழ் பழமையான மொழிகள்ள ஒன்னுன்னு பிரதமர் சொன்னதாலதான் உறுதியாச்சா?? நிஜமாவே நீங்க தமிழ்நாட்டில்தா பொறந்திங்களா??? என்னத்தச் சொல்ல…. காலக்கொடுமை…
*********************************