பாவற்காயை கசப்பு தெரியாமல் இனிப்பாக சமைப்பது எப்படி தெரியுமா?

பாவற்காயை கசப்பு தெரியாமல் இனிப்பாக சமைப்பது எப்படி தெரியுமா?

              

     பாகற்காய் கசப்பு நிறைந்த காயாக இருந்தாலும் அந்த சுவையும் உடலில் சேர்ந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக நீரி ழிவு கட்டுக்குள் வைக்காதவர்கள் இதை அன்றாடம் எடுத்துகொள்ளலாம். கசப்பு தெரியாமல் சத்து குறையாமல்.

ஹைலைட்ஸ்:

  • குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே கசப்பு சுவையும் கொடுத்தால் ஆரோக்கிய குறைபாடு இல்லாமல் வளருவார்கள்.
  • பாவற்காயை கொட்டை நீக்காமல் வறுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது எண்ணெயில் பொரித்து கொடுக்க லாம்.
  • நமது முன்னோர்கள் அனைத்துவிதமான சுவைகளையும் தவிர்க்காமல் சரியாக எடுத்துவந்தார்கள். இனிப்புகளையும் புளிப்புகளையும் குறைத்து கசப்பையும், துவர்ப்பையும் கூடுதலாக எடுத்துகொண்டார்கள். அத்தகைய கசப்பு உணவுகள் இன்று மறக்கடிக்கப்பட்டு இனிப்பையும், புளிப்பையும், மசாலாக்களையும் அதிகம் எடுத்துகொண்டிருக்கிறோம்.
  • அதன் பாதிப்புக்கு உள்ளான பிறகுதான் உணவின் மீதான விழிப்புணர்வும் திரும்புகிறது. அப்படி ஒரு தீரா நோயான நீரிழிவு நோய் வந்தபிறகு தான் உணவின் சுவையை அறிகிறோம். கசப்பு நிறைந்த உணவுகள் நீரிழிவு பாதிப்பு உள்ளானவர்க ளுக்கு உகந்தது என்று பரிந்துரைத்த பிறகுதான் பலரும் பாவற்காயை ருசிக்கவே தொடங்குகிறார்கள்.
  • அதிக இனிப்பு, அதிக காரம், அதிக புளிப்பு நிறைந்த உணவுகளை அன்றாடம் பழகியவர்களுக்கு திடீரென்று கசப்பு மிக்க பாகற்காய் மேலும் கசக்கவே செய்கிறது. ஆனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தவர்கள் அன்றாடம் பாகற் காய் சாறு குடித்துவந்தால் உடலில் போதிய அளவு இன்சுலின் சுரக்கும். இதனால் கசப்பு மருந்தை போல் கடமையே என்று காலையில் பாகற்காய் சாறை மென்று குடிப்பவர்கள் உண்டு.
  • பாகற்காயின் கசப்புதான் உடலுக்கு சேரவேண்டும் என்பதால் பாகற்காயை அப்படியே சாறாக்கி குடிப்பவர்கள் அந்த கசப்பு தெரியாமல் பாகலை தினம் ஒன்றாய் சமைத்து சாப்பிட்டாலும் உடலில் இன்சுலின் அளவு தேவையான அளவு சுரக்கும்.
  • சத்தும் ஆரோக்கியமும் நிறைந்த கடலை அடையை எளிதாக செய்யலாம்…

    பாவற்காய் ஸ்வீட் ஃப்ரை என்று சொல்லும் இந்த ரெஸிபிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் என்றே சொல்லலாம். எப்படி சமைத்தாலும் சுவை கொடுக்கும் என்பதற்கேற்ப இந்த பாவற்காயை எப்படி சமைத்தாலும் ருசி யாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • ருசியும் மணமும் மிக்க பாவற்காய் ஸ்வீட் ரெஸிபியை எப்படி சமைப்பது பார்க்கலாமா?

    தேவையான பொருள்கள்

    பாவற்காய்- அரைகிலோ
    அரிசி மாவு- கால் கப்
    பொட்டு கடலை மாவு -கால் கப்
    கார்ன் ஃப்ளோர் – 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
    மிளகாய்த்தூள்- 2 டீஸ்பூன்
    மிளகுத்தூள்- அரை டீஸ்பூ
    நாட்டு சர்க்கரை- 2 டீஸ்பூன்
    உப்பு- தேவைக்கு
    நல்லெண்ணெய்- தேவைக்கு

    செய்முறை:
                பாவற்காய் தோலை அதிகம் நீக்காமல் வட்டவடிவில் மெலிதாக நறுக்கவும். சிலர் கொட்டைகளை நீக்கி விடுவார்கள். கொட்டைகளை எடுக்க தேவையில்லை. அப்படியே போடலாம்.மெலிதாக நறுக்கிய பாவற்காயை அலசி நீர் போக வடிகட்டி மெல்லிய துணியில் அரை மணி நேரம் நிழலில் காய வைக்கவும்.

             அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டு கடலை மாவு, கார்ன் ஃப்ளோர் மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அரை மணி நேரம் கழித்து உலர வைத்த பாவற்காயை கலந்த மாவுடன் சேர்த்து இலேசாக நீர் தெளித்து நன்றாக கலக்கவும்.

           வாணலியில் 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மாவு கலந்து பிசைந்த பாவற்காயை போட்டு வதக்கவும். அடுப்பு மிதமான தீயில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். அவ்வபோது நன்றாக கிளறி விடுங்கள்.இறக்கும் போது மிளகுத்தூள், நாட்டுச்சர்க் கரை தூவி இறக்குங்கள்.

           மொறுமொறுவென்ற ருசியில் பாவக்காய் கசப்பு சுவடே இல்லாமல் ருசியாக இருக்கும்.உணவுக்கு என்றில்லாமல் சும் மாவே கொறிக்க நன்றாக இருக்கும் என்பதால் அழகாகய்ச் சாப்பிடுவார்கள்.

    குறிப்பு
            பாவற்காய் நல்லதுதான் ஆனால் ஹைபிரேட் பாவற்காயின் பயன்பாடு அதிகம் என்பதால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. மாறாக கொடி பாவற்காய் என்று பார்க்க சிறியதாக இருக்கும் அந்த பாவற்காயில் தான் உண்மையான சத்துகள் அடங்கியிருக்கிறது அவைதான் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல பலனும் தரும்.

    பாவற்காயின் கொட்டைகள் ஆண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று சொல்வார்கள். ஆனால் கொட்டைகளை நன் றாக மென்று சாப்பிட்டால் எந்த குறையும் இருக்காது என்பதே உண்மை.

    மொறுமொறுவென்று க்ரிஸ்பியாக இருக்கும் இந்த பாவற்காயில் கசப்பு அதிகம் தெரியாது என்பதை விட கசப்பே தெரி யாது என்பதுதான் சரியாக இருக்கும். அதே நேரம் இதன் சத்திலும் எவ்வித மாற்றமும் இருக்காது. வயதானவர்களும் இதை சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!