சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா..!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கும் வழங்கப்பட்டது.brock bowers jersey deuce vaughn jersey Iowa State Football Uniforms drew allar jersey colleges in new jersey college football jerseys johnny manziel jersey rowan university new jersey rowan university new jersey college football jerseys deion sanders jersey deion sanders jersey brock bowers jersey asu jersey florida state football jersey
தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான திரைப்பட விருதுகள், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை, டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.