தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை

 தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை

தர்பார் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது பொங்கல் விழாவை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி முடித்துள்ளார்


‘பேட்ட’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி,பாபு, நிவேதா தாமஸ், தம்பி ராமையா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனார். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியட படக்குழு முடிவு செய்துள்ளது. 
 
சமீபத்தில் படபிடிப்பை முடித்த படக்குழு பின்னணி வேலைகளை தீவிரமாக செய்கிறது அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இப்படத்தில் டப்பிங் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

 
இந்நிலையில் இந்தப் படத்திற்கான டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் நடித்த மற்ற நடிகர்களின் டப்பிங் பணி நடைபெறவுள்ளது.
 
இப்படத்தை அடுத்து நடிகர் ரஜினி இயக்குநர் சிவா இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...