முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது புனேரி பல்டன்..!

 முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது புனேரி பல்டன்..!

புரோ கபடி லீக் இறுதி போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய புனேரி பல்டன், முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்கிய 10வது புரோ கபடி லீக் போட்டியில் 12 அணிகள் கலந்து கொண்டன. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. இதில், முதலாவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்திய புனேரி பல்டன் அணி, தொடர்ந்து 2 ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில், ஜெய்ப்பூர் பேந்த்ர்ஸ் அணியை வீழ்த்திய அரியானா ஸ்டீலர்ஸ் அணி, முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இதைத்தொடர்ந்து, தெலங்கானா மாநிலம் கச்சிபெளலியில் நடைபெற்ற இறுதி போட்டியில், லீக் சுற்றில் முதல் இடம் பிடித்த புனேரி பல்தான் அணியை எதிர்த்து ஐந்தாம் இடம் பிடித்த ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி களமிறங்கியது.

தொடக்கம் முதலே புனேரி பல்டன் அணி ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் அதற்கு இணையாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மல்லுக்கட்டியதால், ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றி கொண்டது. இறுதியில், 28-25 என்ற புள்ளி கணக்கில் புனேரி பல்டன் அணி வெற்றியை வசப்படுத்தியது. இதன் மூலம் புரோ கபடி லீக் போட்டியில், புனேரி பல்டன் அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த சீசனில், இறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியிடம் புனேரி பல்டன் அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...