நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும் !!!

 நாட்டு சேதியும்!!! நம்ம சேதியும் !!!
நாட்டு சேதியும் நம்ம சேதியும்:
 நாட்டு சேதி: 
           மகாராஷ்டிராவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு கிடையாது நாங்கள் உருவாக்கும் அரசு முழு 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் — தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.
 நம்ம சேதி: 
            மத்தியில் ஆளும் கட்சி யாரு என்னன்னு தெரிஞ்சும் அநியாயத்துக்கு ஆசைப் படுறாரு……
   *****************************
நாட்டு சேதி:
          முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக உள்ளதால் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய வாருங்கள். அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஓபிஎஸ் அழைப்பு.
 
நம்ம சேதி:  
          இப்படி ஒரு அழைப்பு வரும்னு முன்னாடியே தெரியும். ஆனா சந்தேகம் என்னன்னா விருது கொடுத்ததும் அழைப்பு போனதா???? அழைப்பு போனதால் விருது கிடைத்ததா???
  ***********************
நாட்டு சேதி:
                 உள்ளாட்சித் தேர்தலில் 4 ஓட்டுக்கள் பதிவு செய்யும் வாக்காளர்கள். பரிசோதனை அடிப்படையில் குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் அறிமுகம்.
           
 நம்ம சேதி:
                ஒரு நேரத்தில ஒரு எந்திரத்தில ஒரு ஓட்டு போட்டே ஒன்னும் நடக்கல….. எல்லாம் தலகீழ இருக்கு….
 ***************************                 
நாட்டு சேதி: 
           தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒடிசா கல்வித்துறை வெளியிட்ட இரண்டு பக்க கைப்பிரதியில் காந்தி திடீர் சம்பவத்தால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 
        
நம்ம சேதி: 
        சாவர்க்கருக்கு பாரத ரத்னாவும் கோட்சேவுக்கு தியாகி பட்டமும் கொடுக்கணும்னா வரலாற இப்படித்தானுங்களே எழுதணும்…
***********************
நாட்டு சேதி: 
              நவம்பர் 16 இன்று உலக 
சகிப்புத் தன்மை தினம். 
நம்ம சேதி:
            சகிப்புத்தன்மைக்கு உலகத்திற்கே உதாரணமா மக்களாட்சி இந்தியாவுடைய குடிமக்கள் இருக்கோம்னு நினைக்கும் போது எவ்வளவு பெருமையா இருக்கு?!?!
 *****************************

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...