நாட்டு சேதியும் – நம்ம சேதியும் !!!

  நாட்டு  சேதியும் –  நம்ம சேதியும் !!!

 நாட்டு  சேதி

இந்தியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் மட்டும் ஏறக்குறைய 4.6 கோடி  திறன்அலைபேசிகள் (smart phone) விற்பனை ஆகியுள்ளன. இது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டு விற்பனையை விட 26.5 சதவீதம் அதிகம்.

நம்ம சேதி

இந்தியா வல்லரசா ஆகுதோ இல்லையோ ‘செல்’லரசா ஆகிரும் போலயே!!!

————————————-

நாட்டு  சேதி

நிலவில் ஆய்வு செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவில் உண்டு என்று விஞ்ஞானி சிவதாணு பிள்ளை நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நம்ம சேதி

மேல இருக்கிற நிலாவ பத்தி மட்டும் தான் யோசிப்பிங்களே தவிர கடைசி வரைக்கும் பூமியில  இருக்கிற குழி பிரச்சனையா கண்டுக்கவே மாட்டிங்கனு சொல்லாம சொல்றீங்க…

————————————-


நாட்டு சேதி

உள்ளாட்சி தேர்தலில் விக்கிரவாண்டி,நாங்குநேரி இடைத்தேர்தல் போல அலட்சியமாக இருந்து தோல்வியை தழுவினால் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட செயலாளர்களுக்கு  மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!!

நம்ம சேதி!!!

இடைத்தேர்தல்ல அலட்சியமா இருந்ததா அவரே ஒத்துக்கிராறோ??? கட்சி பொறுப்பாளர்கள் மேல எடுக்கிறதா சொன்ன நடவடிக்கையா ஆட்சியில இருக்கும் போது மக்களுக்கு நல்லது செய்ய எடுத்துருந்தா எதுக்கு இம்புட்டு….

————————————-

நாட்டு சேதி

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் ரூபாய் 6500 கோடி வணிக முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் அதன் வழியாக 60 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

நம்ம சேதி

அதெல்லாம் சரிதானுங்க அய்யா!!! அதுல தமிழ்நாட்டு பசங்க யாராச்சும் இருக்காங்களா???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!