பார்ன்-டூ-வின்
சாதிக்கப் பிறந்தவர்கள் சமூக அமைப்பு பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளது சோதனைகளையும் கண்டுள்ளது. அதன் நிர்வாகி நங்கை ஸ்வேதா என் நீண்ட நாள்தோழி, தலைமைப் பொறுப்பு என்பது பலருக்கு உதாரணமாக இருக்கவேண்டும் என்பது நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டில் இருந்து சற்றும் விலகாத மனமுடையவர் நங்கை ஸ்வேதா.
மிகப்பெரிய இக்கட்டில் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் ஆரம்பித்த நிறுவனம்தான் பார்ன்- டூ- வின் இன்று அதன் நிழலில் பல நங்கைகள் இளைப்பாறுகிறார்கள். உண்ணும் உணவு உடுத்தும் உடை தாகம் தீர்க்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று என எல்லாவற்றிலும் இன்று அரசியல் சாயம் கலந்திருக்கிறது.
பார்ன் டூ வின் தொடங்கிய காலத்தில் ஸ்வேதாவின் பொருளாதார நிலையில் தேக்கம் எவ்வாறு இருந்ததோ அப்படியே இப்போதும் ஆனால் அதன்பிறகு தன் சமுகத்தின் உண்மையான வளர்ச்சிக்குப் பாடுபடும் அவர்களின் குணம் அதை செவ்வனே கொண்டு செல்கிறது. சென்ற பதினைந்து நாட்களுக்கு முன்பு போனில் பேசும் போது கூட ரொம்ப கஷ்டமா இருக்கு லதா நிறைய பேர் அம்மாவா, சகோதரியா நம்பி வர்றாங்க எல்லாரையும் காப்பாற்றணும்.