இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வேன் நீரவ் மோடி லண்டன் கோர்ட்டில் மனு
ரூபாய் 12700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்யதாக குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நீரவ் மோடி லண்டனில் கைதாகி லண்டன் வாண்ட்ஸ்வொர்த் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நான்கு முறை இவரின் பெயில் மனுவை அரசாங்கம் தள்ளுபடி செய்து விட்டது தற்போது ஐந்தாவது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் நீரவ் மோடி
லண்டனின் உள்ள சிறையில் என்னுடைய அறையிலேயே என்னை மூன்ற முறை மோசமாக தாக்கியிருக்கிறார்கள் கொடுமைப் படுத்தப்படுகிறேன் எனவே எனக்கு உரிய பாதுகாப்பும் ஜாமீனும் வழங்க வேண்டும் என்றும் நான் இந்தியாவிற்கு செல்ல விரும்பவில்லை அங்கும் நியாமான முறையில் விசாரணை நடக்காது நியாயமும் கிடைக்காது என்னை பாதுகாப்பாக இங்கே வைத்துக்கொள்ளுங்கள்.
அப்படி மீறி என்னை இந்தியாவிற்கு அனுப்பினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மனுவை அனுப்பியிருந்தார் லண்டன் நீதிமன்றம் இந்த விசாரணை டிசம்பர் 4ம் தேதி வரையில் ஒத்திவைத்து இருக்கிறது.