வாரணாசியில் கடவுள் சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு..
காற்று குறித்த மாசுபாடு நிகழ்வுகளுக்கு விழிப்புணர்வு சமூக ஆர்வலர்கள் பலரால் கொண்டு வரப்படுகிறது ஷெனாய் நகரில் ஒரு பள்ளியில் கூட இந்த விழிப்புணர்விற்கு மாணவிகள் வரவேற்பு தந்துள்ளதாக ஒரு செய்தியும் இருந்தது.
வாகனப்புகை, பட்டாசு, மேலும் பல மாசுக்களினால் நோய் பரவும் போது, நாம் முகத்தை மறைத்துக் கொள்வது வழக்கம். அதே போல் பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் அறுவடைக்கப் பின் வேளாண்கழிவுகள் எரிக்கும் பழக்கம் உள்ளது. இந்த எரிப்பு கடந்த ஞாயிறன்று நடைபெற்றதால் அந்த புகை அனைத்தும் காற்று வெளியை மாசுபடுத்த ஆரம்பித்து விட்டது.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வாரணாசியில் உள்ள கோவில் சிலைகளுக்கு எல்லாம் மூகமூடிகள் அணிவிக்கப்பட்டு உள்ளது. உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியின் சிக்ரா பகுதியில் உள்ள சிவபார்வதி கோவிலில் சிலைகள் அனைத்திற்கும் வெள்ளை நிறத்தில் முகமூடி அணிவிக்கப்பட்டு உள்ளது. குளிர்காலத்தில் கடவுள் சிலைகளின் மேல் போர்வைகள்அணிவிப்பதைப் போன்ற நிகழ்வுதான் இதுவும் என்று கோவில் நிர்வாகம் குறிப்பிட, இதையும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்டோ எடுத்து வைரலாக்கி விட்டிருக்கிறார்கள்.