குடியரசு தினம்- 26.1.2024

 குடியரசு தினம்- 26.1.2024

குடியரசு தினம்- 26.1.2024

இன்று குடியரசு தினம் கொண்டாடும்,

ஜனநாயக நாடு நம் நாடு,

உலகமே வியக்கும் வண்ணம்,

வளர்ந்து வரும் நல் நாடு.

கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா,

அடைந்த சாதனைகளோ கணக்கில்லா.

Dr அம்பேத்கர் படைத்த சாசனம்,

நம் அரசியல் அமைப்பின் ஆதாரம்,

அது நமக்களித்த சுதந்திரம்,

நம் நாட்டின் வெற்றிக்குப் பெரும் காரணம்,

அடிமையாய்க் கிடந்த நம் நாடு,

சந்தித்தப் பிரச்சனைகள்
பல்வேறு

அவற்றை வென்று பெற்ற நம் சுதந்திரம்,

நமக்குக் கிடைத்த பெரும் பாக்கியம்.

கடந்த 75 ஆண்டுகளின் சாதனை,

நம் அரசியல் சாசனத்தின் கொடுப்பினை,

அதை பாதுகாப்பது நம் பெரும் கடமை.

பொருளாதாரத்தில் இந்தியா,

இன்று உலகின் 5வது இடத்தில் இருக்கிறது.

இன்று எல்லாத் துறைகளிலும் இந்தியா,

வளர்ந்துகொண்டே வருகிறது.

வல்லரசு நாடுகளே,

நம் வளர்ச்சியைப் பார்த்து திகைக்கிறது.

எனினும், வறுமைக் கொடுமை நம் நாட்டில்,

குறைந்து போக மறுக்கிறது.

ஜாதி மதக்
கலவரங்கள்,

அவ்வப்போது வெடிக்கிறது.

ஏழை விவசாயிகளின் வாழ்க்கைத் தரம்,

சீரடையாமல் சிதைகிறது.

இந்நிலைமையை உடனே சரி செய்ய,

புதுத் திட்டங்கள் வரவேண்டும்,

தன்னலமற்றத் தலைவர்களை,

தேர்ந்தெடுப்பது நம் பொறுப்பாகும்.

நாம் இக்கடமையைச் செய்ய தவறிவிட்டால்,

நிலைமை விபரீதமாக மாறிவிடும்.

இதுவரை பெற்ற நன்மைகளெல்லாம்,

கானல் நீராய் மறைந்தோடும்.

இன்று குடியரசு நாளைக் கொண்டாடும்,

நாம் சிந்தித்துச் செயல் பட்டு,

தேர்தல் நாளில் தெளிவடைந்து,

உத்தமர்களைத் தேர்ந்தெடுத்தால்,

இந்தியாவின் எதிர்காலம்,

ஒர் பொற்காலத்தைத் தொட்டு விடும்,

மகிழ்ச்சி வெள்ளம் புரண்டோடும்.

ஜெய் ஹிந்த்.

பி வி வைத்தியலிங்கம்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...